நாக சைதன்யா - சோபிதா திருமணம்.. அடேங்கப்பா செம சந்தோஷமா இருக்காங்களே.. ட்ரெண்டாகும் வீடியோ
ஹைதராபாத்: சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா அவரை விவாகரத்து செய்தார். அதனையடுத்து நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்துவந்த அவர் நேற்று ஹைதராபாத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதில் குடும்பத்தினரும், திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். இந்தச் சூழலில் அவர்களின் திருமணத்தில் நடந்த ஒரு விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய குடும்பங்களில் ஒன்று நாகார்ஜுனாவின் குடும்பம். மேலும் பவர் செண்ட்டர் என்றும் அந்தக் குடும்பத்தை டோலிவுட்டினர் கூறுவார்கள். நாகார்ஜுனா மற்றும் அவரது தந்தை போலவே நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவும் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக தண்டெல் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. அதில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

திருமணம் டூ விவாகரத்து: இதற்கிடையே நடிகை சமந்தாவை காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்துவிட்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அதற்கு சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடித்ததுதான் காரணம் என்று ஒருதரப்பினர் கூறினார்கள். மேலும் விவாகரத்துக்கு பிறகு சமந்தாவுக்கு 100 கோடி ரூபாய்வரை ஜீவனாம்சமாக நாக சைதன்யா குடும்பம் கொடுக்க முன்வந்ததாகவும்; அதனை ஏற்க சமந்தா மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
மீண்டும் காதல்: சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு சில காலம் சிங்கிளாக இருந்த நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். இருவரது காதலுக்கு வீட்டுக்கு தெரிந்து க்ரீன் சிக்னலும் கிடைத்துவிட்டது. அதனையடுத்து சிம்ப்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. சூழல் இப்படி இருக்க டிசம்பர் நான்காம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தத் திருமணத்தின் மூலம் சைதன்யாவின் மகிழ்ச்சியை மீட்டுக்கொடுத்த ஒரு உணர்வு என்றும் நாகார்ஜுனா தெரிவித்திருந்தார்.
பிரமாண்ட திருமணம்: அறிவித்தபடி நேற்று ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் திருமணம் நடந்தது. இதில் இருவீட்டாரும், உறவினர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். பொதுவாக திருமணம் காலையில் நடக்கும். ஆனால் இவர்களது திருமணமோ நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற்றது. நாகேஸ்வர ராவின் சிலைக்கு முன்பு சோபிதா துலிபாலாவுக்கு நாக சைதன்யா தாலி கட்டினார். அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.
அகில் செய்த விஷயம்: அவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருகிறது. இந்நிலையில் வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது மேடையில் நாக சைதன்யா சோபிதாவின் கழுத்தில் தாலி கட்டும்போது அவரது தம்பி அகில் சத்தமாக விசில் அடிக்கிறார். அது மேடையில் இருப்பவர்களை மேற்கொண்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அகிலுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கவிருக்கிறது. சமீபத்தில்தான் நிச்சயதார்த்தம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











