சமந்தாவுடன் விவாகரத்து.. நாக சைதன்யா - சோபிதா திருமணம்.. லொக்கேஷன் எங்கே தெரியுமா?.. செம இடம்தான்
ஹைதராபாத்: நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு பிறகு பிரிந்த நாக சைதன்யா இப்போது சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்தது. அதனையடுத்து விரைவில் அவர்களது திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு பேருக்குமான திருமணம் எங்கே நடக்கும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியிருக்கிறது.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இணைந்து நடித்தபோது சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்றது அவர்களின் திருமணம். தொடர்ந்து சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் ஆரம்பத்தில் சிறு விரிசல் ஏற்பட்டு பிறகு பிரிந்துவிட்டார்கள். அதற்கு சமந்தா திருமணத்துக்கு பிறகும் நடித்ததுதான் காரணம் என்று பலர் யூகங்களாக சொன்னார்கள். ஆனால் உண்மை என்னவென்று அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

சோபிதாவுடன் காதல்: சமந்தாவை பிரிந்த பிறகு; நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலித்தார். இருவரும் அடிக்கடி வெளிநாட்டுக்கு டேட்டிங் சென்றார்கள். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். ஆனால் இருவரும் தங்களது காதலை வெளியில் சொல்லாமல் மௌனத்தையே பதிலாக கொடுத்துவந்தனர். இருந்தாலும் அவர்கள் காதலிப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்துவிட்டது. சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
சிம்பிள் நிச்சயதார்த்தம்: இருவருக்குமான நிச்சயதார்த்தம் படு சிம்பிளாக ஹைதராபாத்தில் நடந்தது. இதில் இருவீட்டார் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். மேலும் நாக சைதன்யாவிடம் சமந்தா தனது காதலை சொன்ன நாளில்தான் சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது சமந்தாவின் ரசிகர்களை வெகுவாக கோபப்படுத்தியது. அதுமட்டுமின்றி சமந்தாவும் விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் அவரின் ரசிகர்களுடைய ஆசையாகவும் இருக்கிறது.
விரைவில் திருமணம்: இதற்கிடையே இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்ததால்தான் அவர்களின் நிச்சயதார்த்தத்தை திடீரென நடத்தும்படியான சூழ்நிலை உருவாகிவிட்டதாகவும்; இதன் மூலம் நாக சைதன்யாவுக்கு இழந்த மகிழ்ச்சியை மீட்டு கொடுத்துவிட்டோம் என்ற நிம்மதி பிறந்திருப்பதாகவும் நாகார்ஜுனா தெரிவித்திருந்தார். அவர்களது திருமணம் மிக விரைவில் நடக்கவிருக்கிறது. மேலும் ராஜஸ்தானில்தான் அவர்களது திருமணம் நடக்கும் என்று சொல்லப்பட்டது.
புதிய தகவல்: இந்நிலையில் இவர்களின் திருமணம் நடக்கவிருக்கும் இடம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில்தான் இவர்களின் திருமணம் நடக்கும் என்றும்; இங்கு நடந்தால்தான் சினிமா மற்றும் பிற துறை பிரபலங்கள் வருவதற்கு ஏதுவாக இருக்கும் என்று நாகார்ஜுனா தரப்பு விரும்புகிறது; அதற்கு சோபிதாவும் ஒத்துக்கொண்டுவிட்டார்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெலுங்கு மீடியாக்களில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











