சோபிதாவிடம் அப்படித்தான் பேச சொல்வேன்.. அதற்கு அதுதான் உதவும்.. மனம் திறந்த நாக சைதன்யா
ஹைதராபாத்: சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு அவரை பிரிந்த நாக சைதன்யா இப்போது நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்திருக்கிறார். இருவரது திருமணமும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், குடும்பத்தினர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். இந்தச் சூழலில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு நாக சைதன்யா அளித்த பேட்டி ஒன்றில் சோபிதா துலிபாலா குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா கடைசியாக தூதா என்ற வெப் சிரீஸில் நடித்தார். அதற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. இப்போது அவர் தண்டெல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஹீரோயினாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் தனக்கு ஹிட்டாக அமையும் என்ற நம்பிக்கை சைதன்யாவுக்கு இருக்கிறது.

சமந்தாவுடன் பிரிவு: இதற்கிடையே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது தனக்கு ஜோடியாக நடித்த சமந்தாவை காதலித்தார் சைதன்யா. இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து அவர்களது திருமணம் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். சில வருடங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த அவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டு விவாகரத்தும் பெற்றுக்கொண்டார்கள்.
சோபிதாவுடன் காதல்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா சில வருடங்களுக்கு முன்பிலிருந்து சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்துவந்தார். அவர்கள் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகின. ஆனால் இரண்டு பேருமே தங்களது காதலை பொதுப்படையாக அறிவிக்கவில்லை. சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பிரமாண்ட திருமணம்: அதனையடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் சில வாரங்களுக்கு முன்பு அவர்களுக்கு திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. தனது நாகேஸ்வர ராவின் சிலைக்கு முன்பு சோபிதாவுக்கு தாலி கட்டினார் அவர். இந்தத் திருமண வாழ்க்கையிலாவது நாக சைதன்யா நிலைத்திருக்க வேண்டும் என்று சமந்தாவின் ரசிகர்களும், அவரது ரசிகர்களும் கமெண்ட்ஸ் செய்து வாழ்த்துகளை தெரிவித்தார்கள். இந்தச் சூழலில் சைதன்யா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
நாக சைதன்யா பேட்டி: தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "சினிமா தொழிலில் தினமும் வெவ்வேறு மொழிகளை சேர்ந்த பல மக்களை நான் சந்திக்கிறேன். இருந்தாலும் யாராவது என்னிடம் தெலுங்கில் பேசினால் அவர்களிடம் சீக்கிரமாகவே அட்டாச் ஆகிவிடுவேன். அதனால்தான் என்னிடம் பலரையும் தெலுங்கில் பேச சொல்கிறேன். அது எனக்கு நிம்மதியைத்தான் கொடுக்கும். எனது மனைவி சோபிதா துலிபாலாவிடம்கூட என்னிடம் தெலுங்கில் பேச சொல்லியிருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











