»   »  எந்த ஹீரோயினையாவது புடுச்சுச்சுனா டேட்டிங் போய்டுவேன்ல: சமந்தாவின் காதலர்

எந்த ஹீரோயினையாவது புடுச்சுச்சுனா டேட்டிங் போய்டுவேன்ல: சமந்தாவின் காதலர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: எனக்கு எந்த ஹீரோயின் மீதும் கிரஷ் கிடையாது. எனக்கு யாரையாவது பிடித்திருந்தால் அவரை அணுகி டேட்டிங் போகலாமா என்று கேட்டுவிடுவேன் என்றும், எனக்கு திருமணம் எப்பொழுது என்று தெரியவில்லை என்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

இப்ப ஏன் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் திருமணம் மீது அக்கறை என்று நீங்கள் நினைக்கலாம். நம்ம ஊரு பொண்ணு சமந்தாவின் காதலர் தான் நாக சைதன்யா. பிரபல நடிகர் நாகர்ஜுனாவின் மகன்.

அவர்களின் காதலை பற்றி தான் டோலிவுட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சமந்தா

சமந்தா

சைதன்யாவுக்கு சமந்தாவை பிடித்திருந்தாலும் அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு பெண்ணை பிடிக்கவில்லையாம். இதனால் வீட்டில் பிரச்சனையாக உள்ளதாம். இந்நிலையில் பட விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நாக சைதன்யா.

டேட்

டேட்

எனக்கு எந்த ஹீரோயின் மீதும் கிரஷ் கிடையாது. எனக்கு யாரையாவது பிடித்திருந்தால் அவரை அணுகி டேட்டிங் போகலாமா என்று கேட்டு சென்றுவிடுவேன். எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என தெரியவில்லை. நடக்கும்போது கூறுகிறேன் என்றார் நாக சைதன்யா.

கோபம்

கோபம்

நாக சைதன்யா, சமந்தாவுக்கு விரைவில் திருமணம் நிச்சயம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனக்கு யாரையாவது பிடித்திருந்தால் டேட்டிங் செல்வேன் என்று கூறியதை சமந்தா கேட்டால் கடுப்பாகலாம் என்று கூறப்படுகிறது.

டாட்டூ

டாட்டூ

நாக சைதன்யா தனது கையில் ஒரு டாட்டூ போட்டுள்ளார். தற்போது சமந்தாவின் கையிலும் அதே டிசைன் டாட்டூ உள்ளது. இதன் மூலம் சமந்தா தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளாரா?

    English summary
    Actor Naga Chaitanya said that if he likes anybody he would go for a date with them.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil