ஆமிர்கான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்கப் போகும் நடிகர் இவரா? றெக்கை கட்டி பறக்கும் தகவல்!

சென்னை: ஆமிர் கான் படத்தின் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்கப் போகும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் நடிகர் ஆமிர் கான் நடிக்கும் புதிய திரைப்படம் லால் சிங் சதா. இந்தப் படத்தில் ஹீரோயினாக கரீனா கபூர் கான் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் மோனா சிங்கும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் 1994ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க படமான ஃபாரஸ்ட் கம்ப்பின் ரீமேக் ஆகும்.

கால்ஷீட் பிரச்சனை

கால்ஷீட் பிரச்சனை

இந்தப் படத்தில் முதலில் விஜய் சேதுபதியும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் பல படங்களில் பிஸியாக உள்ள விஜய் சேதுபதி, லால் சிங் சதா திரைப்படத்துக்கு தேதி ஒதுக்குவதில் பிரச்சனை ஏற்பட்டது.

விஜய் சேதுபதிக்கு பதில்

விஜய் சேதுபதிக்கு பதில்

இதனால் அந்தப் படத்தில் இருந்து விலகினார் விஜய் சேதுபதி. இந்நிலையில் லால் சிங் சதா திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த ரோலில் தெலுங்கு நடிகரான நாக சைதன்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் அறிமுகம்

பாலிவுட்டில் அறிமுகம்

இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனிடையே தற்போது நாக சைதன்யா விக்ரம் குமார் இயக்கும் தேங்க் யூ என்ற படத்தில் நடித்து வருகிறார். லால் சிங் சதா படத்தில் நடிப்பது உறுதியானால் அதுவே அவரது பாலிவுட் அறிமுகப்படமாகும்.

பவானி கேரக்டர்

பவானி கேரக்டர்

பல்வேறு மொழிகளிலும் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி பிஸியஸ்ட் நடிகராக வலம் வருகிறார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் பவானி கேரக்டரில் நடித்த பிறகு அவரது மார்க்கெட் இன்னும் உயர்ந்துள்ளது.

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழியிலும் நடித்து வருகிறார். சமந்தா மற்றும் நயன்தாராவுடன் விஜய் சேதுபதி நடித்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அடுத்து ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X