தென்னிந்திய நடிகர்களில் பிடித்த ஹீரோ யார்? டக்குன்னு பதில் சொன்ன நாக சைத்தன்யா.. அடடே இவரா?

ஐதராபாத் : பாலிவுட்டில் நடிகர் அமீர்கானுடன் நாக சைத்தன்யா நடித்து வெளியாகியுள்ளது சிங் சத்தா.

இந்தப் படம் நாளைய தினம் இந்திய அளவில் பான் இந்தியா படமாக திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் பிரிவியூவை பார்த்த பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.

முன்னதாக இவரது நடிப்பில் வெளியான தாங்க்யூ படம் இவருக்கு கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்துள்ளது.

நடிகர் நாக சைத்தன்யா

நடிகர் நாக சைத்தன்யா

நடிகர் நாக சைத்தன்யா பிரபல தெலுங்கு ஹீரோ நாகர்ஜுனாவின் மகன் மற்றும் பிரபல நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர். இவர் தெலுங்கில் முன்னணி ஹீரோவாக பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரது பல படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்துள்ளன.

தாங்க்யூ படம்

தாங்க்யூ படம்

இதனிடையே சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தாங்க்யூ படம் இவருக்கு கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தது. பிரபல இயக்குநர் விக்ரம் குமார் இயக்கியிருந்த இந்தப் படம் கடந்த மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. படத்தில் அவருக்கு ராஷி கண்ணா ஜோடி சேர்ந்திருந்தார்.

லால் சிங் சத்தா படம்

லால் சிங் சத்தா படம்

இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் அமீர்கான், கரீனா கபூர் ஆகியோருடன் இணைந்து லால் சிங் சத்தா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நாக சைத்தன்யா. இந்தப் படம் நாளைய தினம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது.

தமிழகத்தில் வெளியிடும் உதயநிதி

தமிழகத்தில் வெளியிடும் உதயநிதி

இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட உள்ளது. இதனிடையே படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதை ஏராளமான நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டவர்கள் கண்டு களித்தனர். இயக்குநர் பார்த்திபன், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் சிவன் ஆகியோர் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

சூர்யாவின் ரசிகர்

சூர்யாவின் ரசிகர்

இதனிடையே இந்தப் படத்தின் பிரமோஷன் ஒரு பக்கம் மிகவும் சிறப்பாக கடந்த சில வாரங்களில் நடந்துள்ளது. இந்தப் படத்திற்காக நாக சைத்தன்யா கொடுத்த பேட்டியொன்றில் அவர் தான் எப்போதுமே நடிகர் சூர்யாவின் மிகபெரிய ரசிகன் என்று தெரிவித்துள்ளார்.

சூர்யாவுடன் நடிக்க விருப்பம்

சூர்யாவுடன் நடிக்க விருப்பம்

சூர்யாவுடன் விரைவில் இணைந்து நடிக்க தான் ஆர்வமுடன் உள்ளதாகவும் நாக சைத்தன்யா கூறியுள்ளார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இருமொழிப் படமாக உருவாகவுள்ள படத்திலும் நாக சைத்தன்யா கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தின்மூலம் அவர் தமிழிலும் என்ட்ரி ஆகவுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு கிருத்தி ஷெட்டி ஜோடியாகியுள்ளார்.

லால் சிங் சத்தாவில் நாக சைத்தன்யா

லால் சிங் சத்தாவில் நாக சைத்தன்யா

தெலுங்கில் பிரபல ஹீரோவாக இருந்துவரும் நாக சைத்தன்யா தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகை சமந்தாவை திருமணம் செய்த நாக சைத்தன்யா, அவரை விவாகரத்து செய்யும் முடிவை வெளியிட்ட நிலையில், பல சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து இவரது மார்க்கெட் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது நடிப்பில் லால் சிங் சத்தா படம் வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X