Thandel Box Office: வசூலில் தாண்டவம் ஆடியதா தண்டேல்?.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

சென்னை: இந்த வாரம் தமிழில் விடாமுயற்சி மற்றும் தெலுங்கில் தண்டேல் என இரு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளன. இந்தியில் லவ்யப்பா, பேடாஸ் ராஜ்குமார் உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன. அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளே சுமாரான ஓபனிங்காக இருந்த நிலையில், 2வது நாளில் 66 சதவீதம் குறைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய படமாக பிப்ரவரி 7ம் தேதி வெளியான தண்டேல் திரைப்படம் தெலுங்கு வெர்ஷனில் மட்டும் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. மற்ற மொழிகளில் எல்லாம் பெரிய அளவுக்கு வசூல் வேட்டை நடத்தவில்லை.

thandel naga chaitanya

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இடையே உள்ள கெமிஸ்ட்ரி மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. பாசிட்டிவான விமர்சனங்கள் இந்த படத்துக்கு குவிந்து வரும் நிலையில், வீக்கெண்ட் டிக்கெட் புக்கிங் டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் சூடு பிடித்து வருகிறது.

படம் நல்லா இருக்கு: அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் சந்து மொண்டட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, பப்லு பிருத்விராஜ், கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான தண்டேல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. மீனவர்களின் வாழ்க்கை பிரச்சனையை கையிலெடுத்து பெரிய பட்ஜெட்டில் படமாக்கியிருக்கும் நிலையில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

thandel naga chaitanya

முதல் நாள் வசூல் எவ்வளவு?: தண்டேல் படத்தின் தெலுங்கு வெர்ஷன் முதல் நாளில் 9.5 கோடி ரூபாய் வசூலை ஈட்டி நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. அதன் இந்தி வெர்ஷன் 15 லட்சமும் தமிழ் வெர்ஷன் 5 லட்சமும் ஈட்டியுள்ளது. தமிழ் நாட்டில் அஜித்தின் விடாமுயற்சி பல திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில், தண்டேல் படத்துக்கு குறைவான திரையரங்குகள் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக முதல் நாள் வசூல் இந்தியாவில் 10 கோடி ரூபாய் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் அதிகபட்சமாக இந்த படம் 16 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X