சமந்தாவை பிரிந்ததற்கு இதுதான் காரணமா? உண்மையை வெளிப்படுத்திய நாக சைத்தன்யா!

ஐதராபாத் : நடிகர் நாக சைத்தன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

அவர்கள் விவாகரத்தையொட்டி பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன. சில தினங்களாக இந்த பரபரப்பு சற்று அடங்கியிருந்தது.

இந்நிலையில் புஷ்பா படத்தின் பாடலுக்கு சமந்தா நடனமாடியது மற்றும் அதையொட்டி நாக சைத்தன்யாவின் பேட்டி என தற்போது இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நாக சைத்தன்யா -சமந்தா ஜோடி

நாக சைத்தன்யா -சமந்தா ஜோடி

நடிகர் நாக சைத்தன்யா மற்றும் சமந்தா இருவருக்கும் கடந்த 2017ல் திருமணம் நடைபெற்றது. காதல் திருமணமாக இது இருந்தது. இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக மனமொத்த தம்பதிகளாகவே இருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து திடீரென விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த விவாகரத்து தெலுங்கு படவுலகில் மட்டுமின்றி இந்திய அளவில் அவர்களின் ரசிகர்களை மிகுந்த வருத்தத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. தொடர்ந்து இவர்களது விவாகரத்திற்கான காரணங்கள் குறித்து யூகங்கள் பல வெளியாகின.

பல்வேறு காரணங்கள்

பல்வேறு காரணங்கள்

சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றும் அதையொட்டி பலமுறை அபார்ஷன் செய்ததாகவும் அவருக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு உள்ளதாகவும் பல்வேறு வதந்திகள் இந்த விவாகரத்தையொட்டி வெளியாகின. இதனால் கடுப்பான சமந்தா தொடர்ந்து இதற்கு ரியாக்ட் செய்து வந்தார்.

மௌனம் சாதித்த நாக சைத்தன்யா

மௌனம் சாதித்த நாக சைத்தன்யா

ஆனால் நாக சைத்தன்யா இந்த விவகாரத்தில் மௌனம் சாதித்து வந்தார். ஆனால் அவர் தற்போது பேட்டி ஒன்றில், தான் தன்னுடைய குடும்பத்தினருக்கும் தன்னுடைய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று மனம் திறந்துள்ளார்.

புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம்

புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம்

சமீபத்தில் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுளளார் சமந்தா. இந்தப் பாடலுக்கு கண்டனங்கள் எழுந்ததுடன் வழக்கும் போடப்பட்டுள்ளது. இதையடுத்தே நாக சைத்தன்யா அந்த பேட்டியை அளித்துள்ளார். இதன்மூலம் தனது விவாகரத்திற்கான காரணத்தையும் அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

விவாகரத்துக்கு காரணம்?

விவாகரத்துக்கு காரணம்?

மேலும் முன்னதாக சமந்தா தேர்ந்தெடுத்த போல்டான கேரக்டர்களே அவர்களது விவாகரத்துக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. சூப்பர் டீலக்ஸ், தி பேமிலி மேன் 2 ஆகியவற்றில் அவர் மிகவும் போல்ட்டான கேரக்டர்களில் நடித்துள்ளார். குறிப்பாக பேமிலி மேன் 2 சீரிசில் அவர் நடித்திருந்த செக்ஸ் காட்சிகள் அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள்

தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள்

திருமணத்திற்கு பிறகும் சமந்தா நடித்துவந்த கேரக்டர்கள் நாக சைத்தன்யாவை மட்டுமின்றி நாகார்ஜூனா உள்ளிட்ட குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தெரிகிறது. இதையொட்டியே தற்போது நாக சைத்தன்யா, தன்னுடைய குடும்பத்தினரை சங்கடத்திற்குள்ளாக்கும் கேரக்டர்களை தான் தேர்ந்தெடுக்க மாட்டேன் என்று தற்போது குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

என்னோட Divorce-கு அப்பறம் நான் ஒடஞ்சிட்டேன் Samantha Opens Up about NagaChaitanya Divorce
கவர்ச்சி நடனம்

கவர்ச்சி நடனம்

தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம், யசோதா உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் சமந்தா, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். சமீபத்தில் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜு னுடன் இணைந்து இவர் போட்டுள்ள ஆட்டம் மற்றும் அதுகுறித்த விமர்சனங்கள் தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X