குடும்ப மானத்தை வாங்கும் பாத்திரங்களில் நடிக்க மாட்டேன்... சமந்தாவை குறி வைக்கும் நாக சைத்தன்யா?
ஐதராபாத் : நடிகை சமந்தா மற்றும் நாகசைத்தன்யா இருவரும் சமீபத்தில் விவாகரத்து முடிவை எடுத்து அதை அறிவித்தனர்.
இந்நிலையில் தற்போது புஷ்பா படத்தில் சர்ச்சைக்குரிய பாடலில் நடனமாடியுள்ளார் சமந்தா.
இந்நிலையில் குடும்ப மானத்தை வாங்கும் கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் நாக சைத்தன்யா குறிப்பிட்டுள்ளார்.

விவாகரத்து முடிவு
நடிகர் நாகசைத்தன்யா மற்றும் சமந்தா இருவரும் தங்களது 4 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவை சமீபத்தில் எடுத்து அதை வெளியிட்னர். அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சிகள் வீணானது.

கோபமடைந்த சமந்தா
தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட இந்த பிரிவிற்கு சமந்தாவை காரணம் காட்டி பல கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலவின. தொடர்ந்து இதனால் கோபமடைந்த சமந்தா, பல பதிவுகளை வெளியிட்டு தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து தனது மனதை சரியாக்கிக் கொள்ள ஆன்மீக பயணங்களையும் மேற்கொண்டார்.

மீண்டும் சினிமாவில் கவனம்
இதையடுத்து மீண்டும் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். இதனிடையேநேற்று வெளியான புஷ்பா படத்ல் அவர் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் ஆண்களை இழிவுப்படுத்துவதாக ஐதராபாத்தில் வழக்கு தொடரப்பட்டது. படத்திலிருந்து பாடலை நீக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

சர்ச்சைக்குள்ளான பாடல்
தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இந்தப் பாடலுக்கு எதிர்ப்பு எழுந்தது. நேற்றைய தினம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் பாடலில் ஆடிய சமந்தாவிற்கும் கண்டனங்கள் எழுந்தன. பாடலில் அதிகமான கவர்ச்சியை காட்டி அவர் ஆடியுள்ளார்.

நாக சைத்தன்யா பேட்டி
இதனிடையே குடும்ப மானத்தை வாங்கும் வகையிலும் குடும்ப உறுப்பினர்களுக்கு சங்கடம் தரும் வகையிலும் தான் கதாபாத்திரங்களை ஏற்க மாட்டேன் என்று சமிபத்திய பேட்டி ஒன்றில் நாக சைத்தன்யா தெரிவித்துள்ளார். அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க தான் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மறைமுகமாக குறிவைத்த நாக சைத்தன்யா
ஆனால் தன்னுடைய நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் பாத்திரங்களை ஏற்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியில் நாக சைத்தன்யா மறைமுகமாக சமந்தாவைத்தான் குறிப்பிடுகிறார் என்று சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றன.
Recommended Video

பரபரப்பை ஏற்படுத்திய பேச்சு
நாக சைத்தன்யா மற்றும் சமந்தா இருவரும் மனமொத்த தம்பதிகளாகவே வலம்வந்தனர். அவர்களது பிரிவுக்கு இதுவரை எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இருவரும் நட்புடன் பிரிவதாகவும் அவர்கள் தங்க்ளது டைவர்ஸ் குறித்த அறிவிப்பில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சமந்தாவின் ஆட்டம் குறித்து நாக சைத்தன்யா இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











