தமிழுக்கு வர்றாராம் இந்த முன்னணி நடிகர்... யார் டைரக்ஷன்ல நடிக்கப்போறாரு தெரியுமா?
சென்னை : நடிகர் நாக சைத்தன்யா மற்றும் சமந்தா இருவரும் தெலுங்குப் படவுலகின் முன்னணி நடிகர்களாக இருந்தனர். இருவரும் காதலித்து மணம் முடித்த நிலையில் இந்த திருமண வாழ்க்கை தொடரவில்லை. இருவரும் விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.

நாக சைத்தன்யா -சமந்தா விவாகரத்து
நடிகர் நாக சைத்தன்யா தெலுங்குப் படவுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகை சமந்தாவை விவாகரத்து செய்யும் முடிவை வெளியிட்டார். இதையடுத்து இருவரையும் இணைக்கும் முயற்சியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டனர். ஆனால் அவை எந்த பலனையும் கொடுக்கவில்லை.

சர்ச்சைகளில் சிக்கிய தம்பதி
இருவருமே இந்த காலகட்டத்தை கடக்க பெரும் பிரயத்தனப்பட்டனர். பல்வேறு சர்ச்சைகள், வதந்திகளை இருவருமே கடக்க வேண்டியிருந்தது. குறிப்பாக சமந்தா பல்வேறு பிரச்சினைகளில் சிக்கினார். இத்தகைய சர்ச்சைகளுக்கு பதில் சொல்லியே சமந்தா பிரச்சினைகளில் சிக்கினார்.

எளிதில் கடந்த நாக சைத்தன்யா
ஆனால் இந்த காலகட்டத்தை எளிதில் கடந்தார் நாக சைத்தன்யா. குடும்ப வாழ்க்கையையும் தன்னுடைய சினிமா பயணத்தையும் தான் ஒருபோதும் சேர்த்ததில்லை என்று அவர் முன்னதாக தெரிவித்திருந்தார். அதற்கேற்பவே இந்த வதந்திகளை அவர் புறம் தள்ளினார். அதனாலேயே அவரால் இந்த முக்கியமான முடிவில் இருந்து வெளிவர முடிந்தது.

படங்களில் பிசி
ஆனால் விவாகரத்துக்கு பிறகு நாக சைத்தன்யா மற்றும் சமந்தா இருவருமே தங்களது படங்களின் பணிகளில் தங்களை சிறப்பாக பொருத்திக் கொண்டனர். இருவருக்குமே கைநிறைய படங்கள் காணப்படுகின்றன. நாகசைத்தன்யா தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில் தேங்யூ மற்றும் வெப் தொடர் என பிசியாக நடித்து வருகிறார்.

தமிழில் கவனம் செலுத்த திட்டம்
இந்நிலையில் விவாகரத்துக்கு பிறகு தற்போது தமிழில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளாராம் நாக சைத்தன்யா. முன்னதாக தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து நேரடி படங்கள் எதிலும் அவர் நடிக்காத நிலையில் தற்போது தமிழில் நடிக்கவுள்ளாராம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் வரலாற்று பின்னணி கொண்ட படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள நாக சைத்தன்யாவிற்கு தமிழ் திரையுலகம் கைக்கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











