சூட்டிங் துவங்கிய நாக சைத்தன்யா -வெங்கட் பிரபு படம்.. சூப்பர் இளையராஜா -யுவன் காம்பினேஷன்!

சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, மன்மத லீலை படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்தன.

இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது அவர் நாக சைத்தன்யா -கிரீத்தி ஷெட்டி லீட் கேரக்டர்களில் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்பே போடப்பட்ட நிலையில், தற்போது சூட்டிங் துவங்கவுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு

இயக்குநர் வெங்கட் பிரபு

இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்தடுத்த சிறப்பான படங்களை இயக்கி வருகிறார். ஹீரோவாகவே இவரது பயணம் துவங்கினாலும், அது அவருக்கு அந்த அளவில் கைக்கொடுக்காத நிலையில் இயக்குநராக தன்னுடைய பயணத்தை மாற்றினார். தொடர்ந்து சிறப்பான படங்களை இயக்கி வருகிறார்.

எவர்கிரீன் படங்கள்

எவர்கிரீன் படங்கள்

இவரது சென்னை 28, மங்காத்தா படங்கள் எவர்கிரீன் ரகம். கோவா போன்ற படங்களில் இளைஞர்களின் பார்ட்டி மூடை வெளிக் கொண்டு வந்தார். சென்னை 28 படத்தில் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டை மையமாக வைத்து படத்தை கொடுத்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அஜித்தின் மங்காத்தா படம்

அஜித்தின் மங்காத்தா படம்

இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தை வைத்து இவர் கொடுத்திருந்த மங்காத்தா படமும் இவருக்கு சிறப்பாக கைகொடுத்தது. அஜித்தின் வேற லெவல் கேரக்டரை இந்தப் படம் கொடுத்தது. தொடர்ந்து சமீபத்தில் வெளியான மாநாடு படத்திலும் வித்தியாசமான பாணியில் டைம் லூப்பை மையப்படுத்தியிருந்தார்.

மாநாடு படம்

மாநாடு படம்

இந்தப் படத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரை மிகவும் சிறப்பாக பயன்படுத்தியிருந்தார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தின் கதைகளம் மிகவும் சிக்கலாக இருந்த நிலையில், அதை தனக்கே உரிய பாணியில் சிறப்பான திரைக்கதை, காட்சி அமைப்புகளால் அழகுப் படுத்தியிருந்தார்.

நாக சைத்தன்யாவுடன் கூட்டணி

நாக சைத்தன்யாவுடன் கூட்டணி

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நாக சைத்தன்யாவை கொண்டு தமிழ், தெலுங்கில் இருமொழிப்படமாக உருவாகவுள்ள NC22 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் நாக சைத்தன்யாவிற்கு தமிழில் முதல் படம்.

வெங்கட்பிரபுவின் தெலுங்கு என்ட்ரி

வெங்கட்பிரபுவின் தெலுங்கு என்ட்ரி

அதேபோல இந்தப் படத்தின்மூலம் தெலுங்கில் கால்பதிக்க உள்ளார் வெங்கட் பிரபு. தமிழ் ரசிகர்களை என்டர்டெயின் செய்தாகிவிட்டது. அடுத்த டார்கெட் தெலுங்கு ரசிகர்கள்தான் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார். இந்தப் படத்தில் இளையராஜா மற்றும் யுவன் இணைந்து இசையமைக்கவுள்ளனர்.

அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம்

அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம்

நாக சைத்தன்யா இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளர் எஸ்ஆர் கதிர் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்ளவுள்ள நிலையில் படத்தின் எடிட்டிங்கை வெங்கட்ராஜன் மேற்கொள்ளவுள்ளார்.

படத்தின் தொழில்நுட்ப டீம்

படத்தின் தொழில்நுட்ப டீம்

படத்தின் சண்டை காட்சிகளை படமாக்க சர்வதேச ஆக்ஷன் இயக்குநர் யானிக் பென் படத்தில் இணைந்துள்ளார். படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த இந்த அறிவிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தில் நாக சைத்தன்யாவிற்கு கிரீத்தி ஷெட்டி ஜோடியாகியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X