நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் இன்று.. சண்டை போட சொல்லும் சமந்தா.. ட்ரெண்டாகும் போஸ்ட்
சென்னை: நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று திருமணம் நடக்கவிருக்கிறது. இத்திருமணம் சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். இன்று ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் சைதன்யா - சோபிதா திருமணம் நடக்கவிருக்கும் சூழலில் இன்ஸ்டாகிராமில் சமந்தா போட்டிருக்கும் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
சமந்தாவுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிறகு மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து ஃபேமஸ் ஆனார். தொடர்ந்து தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோருடன் நடித்து முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்தை அடைந்தார். அவர் தமிழில் நடித்த படங்கள் சொல்லிக்கொள்ளும்படியாகத்தான் ஹிட்டடித்தன. இதன் காரணமாக தெலுங்கிலும் அவருக்கு கதவுகள் திறந்தன.

நாக சைதன்யாவுடன் காதல்: சூழல் இப்படி இருக்க விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தை ஏற்றார் சமந்தார். அந்தப் படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்திருந்தார். படத்தில் இருந்த கெமிஸ்ட்ரி ஆஃப் கேமராவிலும் இரண்டு பேருக்கும் ஒர்க் அவுட் ஆனது. இதன் காரணமாக இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு முதலில் நாகார்ஜுனா வீட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதாகவும்; சைதன்யா ஒருவழியாக ஒத்துக்கொள்ள வைத்துவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவித்தன.
விவாகரத்து: பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு நாக சைதன்யா - சமந்தா திருமணம் கோவாவில் நடந்தது. ஆனால் சில வருடங்களிலேயே அவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பிரிவுக்கு பிறகு சமந்தா சிங்கிளாக இருந்துகொண்டு தனது கரியரில் கவனம் செலுத்திவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியாகி சக்கைப்போடு போட்டது. நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். இருவரது திருமணத்துக்கு வீட்டில் க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டது.
இன்று திருமணம்: அதன்படி ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இன்று இரவு 8 மணிக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. மொத்தம் இந்தத் திருமண சடங்குகள் எட்டு மணி நேரம் நடக்கவிருப்பதாகவும்; இத்திருமணத்துக்கு மட்டும் 200 கோடி ரூபாய் செலவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் பாலிவுட்டிலிருந்து கோலிவுட்வரை ஏகப்பட்ட நட்சத்திரங்களும்; அரசியல் பிரமுகர்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இன்று திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.
சமந்தாவின் போஸ்ட்: இந்நிலையில் இத்திருமணம் நடக்கும் இன்று சமந்தாவின் மனநிலை என்னவாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் எண்ண தொடங்கினார்கள். சமந்தாவோ ரொம்பவே கூலாக இருக்கிறார் என்பது அவரது சமூக வலைதள பக்கத்தை பார்த்தாலே புரிகிறது. அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி வைத்திருக்கிறார். அந்த ஸ்டோரியில் ஒரு சிறுவனும் சிறுமியும் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். அதில் அந்த சிறுமி அந்த சிறுவனிடமிருந்து லாவகமாக தப்பித்து சண்டையிடுகிறார். அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக சமந்தா, 'இந்த சிறுமி போல் சண்டையிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் முன்னாள் கணவருக்கு திருமணம் நடக்கும் இன்று இப்படி ஒரு வீடியோவை போஸ்ட் செய்திருக்கிறாரே சம்மு. ஒருவேளை சண்டையிடும் மூடில் இருக்கிறாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











