'நகல்'... புதுமுகங்கள் நடிக்கும் மெடிக்கல் த்ரில்லர் படம்!
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் மெடிக்கல் சயின்ஸ் பிக்சன் படம் 'நகல்'.
Recommended Video

சென்னை: புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் மெடிக்கல் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'நகல்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது.
எஸ் 2 எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.கிருஷ்ணா மோகன் இயக்கும் படம் 'நகல்'. புதுமையான கதையம்சத்துடன், சயின்ஸ் பிக்சன் மெடிக்கல் த்ரில்லர் படமாக இது உருவாகவுள்ளது.

புதுமுகம் சிவசக்தி இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பல குறும்படங்களில் நடித்துள்ள மும்பை மாடல் ரிஷ்மா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழின் முன்னணி நடிகர்கள் பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பைசல் இசையில்,ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இப்படத்துக்கு பம்மல் ரவி ஸ்டன்ட் அமைக்கிறார். மணிவர்மா மற்றும் ஷரன் சுந்தரம் கலை பணியை கவனிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் நேற்று துவங்கியது. இயக்குனர் சுப்பிரமணிய சிவா மற்றும் நடிகர் ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.
இதன் படபிடிப்பு சுமார் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு சென்னையிலும்,மருத்துவத்துறை ரீதியான காட்சிகள் வெளிநாடுகளிலும் படமாக்கப்படவுள்ளது. பாடல்களை ஊட்டியில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











