Nagarjuna: மகனுக்கு ரெண்டாவது திருமணம்..எமோஷ்னலாக வாழ்த்து சொன்ன நாகர்ஜுனா! நீங்களே பாருங்க!

ஹைதராபாத்: நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நேற்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் ஹைதராபாத்தே ஸ்தம்பிக்கும் அளவுக்கு நடைபெற்றது. மணமக்களை திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் சந்தித்து வாழ்த்தினர். இந்நிலையில், நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் தனது மகனுக்கும் மருமகளுக்கும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நாக சைதன்யாவுக்கு இது இரண்டாவது திருமணம். அதேநேரத்தில் சோபிதா துலிபாலா இப்போதுதான் இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கின்றார். ஆமாம், நாக சைதன்யா இதற்கு முன்னர் நடிகை சமந்தாவை இதேபோல், காதலித்து திருமணம் செய்தார். அதன் பின்னர் விவாகரத்தும் செய்தார். சில ஆண்டுகளாக காதலில் இருந்த நாக சைதன்யாவும் சமந்தாவும், கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம், கோவாவில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்தத் திருமணத்திற்கு பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

nagarjuna akkineni naga chaitanya sobhita dhulipala

மிகவும் காதலோடும் மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வந்த இவர்கள், கடந்த 2021ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். இவர்களது இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2022ஆம் ஆண்டு நீதிமன்றம், இவர்களது திருமண பதிவினை சட்ட ரீதியாக ரத்து செய்து, இவர்களின் விவாகரத்தை ஏற்றுக் கொண்டது. மேலும் இந்த விவாகரத்தின்போது, சில நூறு கோடிகள் சமந்தாவுக்கு, ஜீவனாம்சமாக வழங்கப்பட்டது. ஆனால் அவற்றையெல்லாம் சமந்தா ஒரே நொடியில் வேண்டாம் எனக் கூறிவிட்டார்.

nagarjuna akkineni naga chaitanya sobhita dhulipala

நாகர்ஜுனா: அதன் பின்னர், நேற்று, நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துள்ளார். இப்படியான நிலையில் நாக சைதன்யாவின் தந்தையும், நடிகருமான நாகர்ஜுனா, தனது எக்ஸ் தள பக்கத்தில் நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துக் குறிப்பில், " தங்களது இனிமையான இல்லற வாழ்வைத் தொடங்கும் சோபிதா மற்றும் நாக சைதன்யாவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் உள்ளுக்குள் உணர்ச்சியாகவும் உள்ளது. எனது அன்பு மகன் சாய்க்கு வாழ்த்துகள். சோபிதா நீ ஏற்கனவே எங்கள் வாழ்கையில், பல மகிழ்ச்சிகளைக் கொண்டுவந்துவிட்டாய், உனக்கும் வாழ்த்துகள்.

nagarjuna akkineni naga chaitanya sobhita dhulipala

ஆசீர்வாதம்: அக்கினேனியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்போது நிறுவப்பட்ட சிலைக்கு முன் உங்களது திருமணம் நடைபெற்றதை நினைக்கும்போது, நீங்கள், அவரால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள் எனத் தோன்றுகின்றது. உங்களது இல்லற வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் அக்கினேனியின் வாழ்த்தும் ஆசீர்வாதமும் எப்போதும் உங்களுக்கு இருக்கும் என நம்புகின்றேன். இன்று உங்களை நோக்கி வரும் எண்ணற்ற ஆசீர்வாதங்கள் அனைத்திற்கும் நான் மனதார நன்றி கூறுகின்றேன்" என பதிவிட்டுள்ளார்.

nagarjuna akkineni naga chaitanya sobhita dhulipala

எமோஷ்னல்: இவரது இந்தப் பதிவைப் பார்த்த இணையவாசிகள், புதுமண தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல், சிலர், நாகர்ஜுனா மிகவும் எமோஷ்னலாக வாழ்த்து தெரிவித்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் பலரது கவனத்தைனை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X