Naga Chaitanya Wedding Gift : நாக சைதன்யா - சோபிதா திருமண பரிசு ரெடி.. விலை மட்டும் இத்தனை கோடிகளா?
ஹைதராபாத்: இந்த வாரம் தெலுங்கு திரையுலத்திற்கு திருவிழாதான். காரணம் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு தரமான சம்பவங்கள் நடக்கவுள்ளது. டிசம்பர் 5ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 ரிலீஸ் ஆகவுள்ளது. அதேநேரத்தில் அதற்கு ஒரு நாள் முன்பு அதாவது டிசம்பர் 4ஆம் தேதி நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவுக்கு திருமண பரிசு வாங்கி தயாராக வைத்துள்ளார் நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமன நாகர்ஜுனா விலை உயர்ந்த சொகுசு காரினை பரிசாகக் கொடுக்க, காரை வாங்கியுள்ளார். அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.
நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் இருந்தனர். நாக சைதன்யாவுக்கு சோபிதா துலிபாலாவை அறிமுகம் செய்து வைத்ததே நாகர்ஜுனாதான் எனவும் சொல்லப்படுகின்றது. இவர்கள் டேட்டிங் , காதலாக மாற, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இது தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியானாலும் இருவரின் தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக எதுவுமே கூறப்படவில்லை. இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இது தொடர்பாக நாகர்ஜுனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

இவர்கள் நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர், பலரும் இவர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும் இவர்களின் திருமணம் எப்போது என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டே வந்தது. இதுமட்டும் இல்லாமல், ரசிகர்களும் இவர்களின் திருமணத் தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தனர். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, சிலர் நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியான சமந்தா குறித்த தகவல்களை இணையத்தில் அதிகம் பகிர்ந்த வண்ணம் இருந்தனர். நாகர்ஜுனாவும் சமந்தாவும் திருமணம் செய்து கொண்டு கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
நெட் ஃப்ளிக்ஸ்: நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் திருமணத்திற்காக மிகவும் பிசியாக உள்ளனர். குறிப்பாக நலங்கு வைப்பது, திருமணத்திற்கு முந்தைய சடங்குகளில் ஈடுபடுவது என இவர்கள் இருவருமே செம பிஸியாக உள்ளனர். இதுமட்டும் இல்லாமல், இவர்களின் திருமண வீடியோவை நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்களின் திருமண பரிசாக விலையுயர்ந்த சொகுசுக்காரினை, வழங்க நாகர்ஜுனா காரை வாங்கியுள்ளார்.
திருமண பரிசு: நாகர்ஜுனா வாங்கியுள்ள காரானது, லெக்சாஸ் எல்.எம். எம்.பி. வி ரக கார் ஆகும். இந்தக் காரின் உற்பத்தி விலை ரூபாய் 2 கோடியே 15 லட்சம், பதிவு வரிகள் அனைத்தும் சேர்த்து காரின் மொத்த விலை ரூபாய் 2 கோடியே 50 லட்சம் எனக் கூறப்படுகின்றது. இந்தக் காரினை தனது மகனின் திருமணத்திற்காக தனது மகனுக்கும் மருமகளுக்கும் பரிசளிக்க வாங்கியுள்ளதாக கூறபடுகின்றது. மெருன் சிவப்பு நிறத்தில் இந்தக் கார் உள்ளது.
நலங்கு: திருமண ஏற்பாடுகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. சில தினங்களுக்கு முன்புகூட சோபிதாவிற்கு மஞ்சள் பூசி நலங்கு வைக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பலரும் இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











