Avantika: குஷ்பு மகள் திருமண வரவேற்பில் நாகர்ஜுனா - அமலா ஜோடி.. களைகட்டிய அவந்திகா திருமண வரவேற்பு
சென்னை: நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி குடும்பத்தில் தற்போது திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இவர்களது மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் நாளை காலை நடைபெறவுள்ள நிலையில், இன்று நடைபெற்று வரும் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் தொடர்ந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகர்ஜுனா தனது மனைவி அமலாவுடன் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதாவது, தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகளான குஷ்புவும் சுந்தர்.சியும், தங்களது மூத்த மகள் அவந்திகாவின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை கடந்த சில வாரங்களாக செய்து வந்தனர். திருமணம் நாளை காலை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இன்று சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில், இந்த திருமணத்திற்கு அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களுக்கும் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து குஷ்பு - சுந்தர்.சி தம்பதியினர் திருமண அழைப்பிதழை வழங்கியிருந்தனர். அதேபோல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் நேரில் சந்தித்து அழைப்பு கொடுத்திருந்தது அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் வரவேற்பு நிகழ்ச்சியில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா தனது மனைவி அமலாவுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். குஷ்பு, சுந்தர்.சி மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
விஜய் - த்ரிஷா: மேலும், இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், நடிகை த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மற்றொருபுறம், குஷ்பு மற்றும் சுந்தர்.சி குடும்பத்தின் இந்த மகிழ்ச்சியான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மொழி திரையுலக பிரபலங்களும் சென்னைக்கு வருகை தந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒரு நட்சத்திர சங்கமமாகவே மாறியுள்ளது.

திருமணம்: நாளை காலை நடைபெறவுள்ள அவந்திகாவின் திருமணத்திற்கு முன்னதாகவே இன்று நடைபெற்று வரும் வரவேற்பு நிகழ்ச்சி கோலிவுட் வட்டாரத்தின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது. குறிப்பாக நாகர்ஜுனா - அமலா தம்பதியினரின் வருகை தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், அடுத்ததாக முதலமைச்சர் விஜய் மற்றும் பிற முன்னணி பிரபலங்களின் வருகையையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications