இந்தியாவிலேயே 3வது பெரிய பணக்கார நடிகரின் வாரிசு.. நாக சைதன்யா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

ஹைதராபாத்: நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 8ம் தேதி நேற்று நடைபெற்றது. நாகார்ஜுனாவின் இல்லத்திலேயே இந்த நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், சரியாக 9:42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக நாகார்ஜுனா அறிவித்திருந்தார்.

ரட்சகன், தோழா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவி லக்‌ஷ்மி டகுபதிக்கும் மகனாக 1986ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர் நாக சைதன்யா.

Naga Chaitanya Nagarjuna net worth

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நிலையில், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்ததாக புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக இருவரும் நிச்சயம் செய்துக் கொண்டனர். இந்நிலையில், நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு மற்றும் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

நாகார்ஜுனாவின் மகன்: நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யா 2009ல் தெலுங்கில் வெளியான ஜோஷ் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்த ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார். தமிழில் சிம்பு, த்ரிஷா ஹீரோ, ஹீரோயினாக நடித்த நிலையில், சிம்பு இயக்கும் படத்தின் நடிகர்களாக நாக சைதன்யா - சமந்தா நடித்திருப்பார்கள். தெலுங்கில் ஏ மாய சேசாவே என்கிற தலைப்பில் வெளியான படத்தில் நாக சைதன்யா - சமந்தா ஹீரோ, ஹீரோயினாக நடித்திருப்பார்கள். அந்த படத்தில் ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்து இருவரும் 2017ம் ஆண்டு திருமணம் செய்துக் கொள்ள வைத்தது.

பாவம் சமந்தா: 4 ஆண்டுகள் சந்தோஷமாக நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த சமந்தாவும் நாக சைதன்யாவும் தங்கள் காதலை வெளிப்படுத்தும் விதமாக டாட்டூக்களை போட்டுக் கொள்வது, சமந்தா பிறந்தநாளுக்கு நாக சைதன்யாவே கேக் சமைப்பது என அலப்பறையை கிளப்பினர். ஆனால், திடீரென இருவரும் 2021ம் ஆண்டு விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்து பிரிந்தனர். நாக சைதன்யாவுக்கு சோபிதா மீது ஏற்பட்ட மோகம் தான் சமந்தா அவரை பிரிய காரணம் என ஏகப்பட்ட சர்ச்சைகளும் கிளம்பியுள்ளன.

நாக சைதன்யா சம்பளம்: தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரான நாக சைதன்யா ஒரு படத்துக்கு அதிகபட்சம் 10 முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறுகின்றனர். அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தின் மூலம் இந்திக்கு சென்ற நாக சைதன்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி படத்தின் மூலம் கோலிவுட்டிலும் கால் பதித்தார். ஆனால், இரு படங்களும் அவருக்கு ஃபிளாப் ஆகவே அமைந்தன. சாய் பல்லவியுடன் தாண்டேல் எனும் படத்தில் நடித்து வரும் நாக சைதன்யா விளம்பரங்களிலும் சம்பாதித்து வருகிறார்.

Naga Chaitanya Nagarjuna net worth

3வது பணக்கார நடிகர்: நடிகர் நாகார்ஜுனா இந்தியாவிலேயே 3வது பெரிய பணக்கார நடிகர் எனக் கூறுகின்றனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 6000 கோடி சொத்துக்களுடன் முதல் இடத்தில் இருப்பதாகவும் 3200 கோடி சொத்துக்களுடன் ஹ்ரித்திக் ரோஷன் 2வது இடத்தையும் 3100 கோடி சொத்துக்களுடன் நாகார்ஜுனா 3வது இடத்தையும் பிடித்து இருப்பதாக கூறுகின்றனர்.

நாக சைதன்யா சொத்து மதிப்பு: 3100 கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கென தனியாக ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் தந்தை நாகார்ஜுனா வீட்டுக்கு அருகே சொந்த வீடு உள்ளது. மேலும், சொகுசு கார்களையும் வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 170 கோடி ரூபாய் வரை நாக சைதன்யாவிடம் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X