செம சர்ப்ரைஸ்.. பிக்பாஸில் இன்னைக்கு டபுள் ட்ரீட்.. கமலுக்கு வாழ்த்து சொல்லும் நாகார்ஜுனா!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பிறந்தநாள் வேற லெவலில் கொண்டாடப்பட உள்ளது.

தமிழ் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி, தெலுங்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் நாகார்ஜுனா இணைந்து வாழ்த்த உள்ளனர்.

அதன் அட்டகாசமான புரமோ தற்போது ஸ்டார் மாவில் ஒளிபரப்பாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கு பிக் பாஸில் கமல்

தெலுங்கு பிக் பாஸில் கமல்

நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் புது புரமோ வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்து இருக்கிறது. நடிகர் நாகார்ஜுனா, தெலுங்கு பிக் பாஸ் ஹவுஸ்மேட்களிடம் கமல்ஹாசன் குறித்து பேசியதும், டிஜிட்டல் திரை மூலம் கமல்ஹாசனை காட்ட அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து விட்டனர்.

நாகார்ஜுனா வாழ்த்து

நாகார்ஜுனா வாழ்த்து

இந்தியாவிலேயே இணையற்ற நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் என சிறப்பான வரவேற்பை கொடுத்த நாகார்ஜுனா, தமிழில் நடிகர் கமலுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க தெலுங்கு பிக் பாஸ் போட்டியாளர்களும் உலகநாயகனுக்கு வாழ்த்துக்களை கூறுவதை பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

நாகார்ஜுனா ‘ஹவுஸ்ஃபுல்’ கலாய்

நாகார்ஜுனா ‘ஹவுஸ்ஃபுல்’ கலாய்

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெறும் 10 போட்டியாளர்களே உள்ள நிலையில், தமிழ் பிக் பாஸ் வீட்டை அகம் டிவி வழியே பார்த்த நாகார்ஜுனா என்ன சார் இன்னும் வீடு ஹவுஸ்ஃபுல்லாகவே இருக்கே என கேட்டு கலாய்ப்பதும் செம சூப்பர். இந்த வாரத்தில் இருந்து வீட்டில் இருந்து ஆட்களை வெளியேற்றும் பணியை கமல் ஆரம்பிப்பார் என்று தெரிகிறது.

ராயல் சல்யூட்

ராயல் சல்யூட்

சகலகலா வல்லவன் கமல்ஹாசனின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்த பிக் பாஸ் குழு, தமிழ் மற்றும் தெலுங்கு நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் ஒருங்கிணைத்து வாழ்த்து சொல்ல வைத்து அசத்தி உள்ளது. நடிகர் நாகார்ஜுனா கமலுக்கு ராயல் சல்யூட் அடித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

முதல் முறை

முதல் முறை

பிக் பாஸ் வரலாற்றிலேயே இரண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒன்றாக திரையிடுவது இது தான் முதல் முறை என தெரிகிறது. இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை இதற்காகவே ரசிகர்கள் மறக்காமல் கண்டு ரசிப்பார்கள் என்பது உறுதியாகி உள்ளது. இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் என்னவெல்லாம் சர்ப்ரைஸ் காத்திருக்கிறதோ? தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X