அவர்தான் எங்களுக்கு உத்வேகம்.. சமந்தாவின் முன்னாள் மாமனார் நாகார்ஜுனா நெகிழ்ச்சி

ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவர் தனது தந்தை நாகேஸ்வர ராவ் வழியில் நடிகராக வந்தவர். இவரது மகன் நாக சைதன்யாவும் தெலுங்கு திரையுலகில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருக்கு சமீபத்தில்தான் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது. முதலில் சமந்தாவை திருமணம் செய்து பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தார். இந்தச் சூழலில் நாகார்ஜுனா வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

தெலுங்கு திரையுலகில் ஃபேமஸான நடிகராக வலம் வந்தவர் நாகேஸ்வர ராவ். பல படங்களில் நடித்து புகழடைந்தவர் அவர். அவரைப் போலவே அவரது மகன் நாகார்ஜுனாவும் டோலிவுட்டில் ஹீரோவாக இருக்கிறார். சொல்லப்போனால் நாகேஸ்வர ராவைவிடவும் உச்சத்தில் இருக்கிறார் நாகார்ஜுனா. இவர் முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு பிறகு நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

nagarjuna nageswara rao naga chaitanya

இரண்டு திருமணங்கள்: தந்தை வழியில் எப்படி நாக சைதன்யா நடிகராக மாறினாரோ அதேபோல் தந்தை வழியில் இரண்டு திருமணங்கள் செய்தார். முதலில் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில காரணங்களால் அவரை விவாகரத்து செய்தார். அதனையடுத்து நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்திருக்கிறார். இவர்களது திருமணம் கடந்த வருடம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் பிரமாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நாகார்ஜுனா வீடியோ: அன்னபூர்ணா ஸ்டூடியோஸை நிறுவியது நாகேஸ்வர ராவ். இப்போது அதனை நாகார்ஜுனா கவனித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் திறக்கப்பட்டு 50 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நாகார்ஜுனா. அதில் பேசிய அவர், "சாலைகளே இல்லாத நாட்களில் இந்த ஸ்டூடியோஸை எப்படி எனது தந்தை அமைத்தார் என்பது இன்னமும் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்த ஸ்டூடியோஸ் பலருக்கு வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. பலருக்கும் எனது தந்தை உத்வேகம் அளிக்கிறார்.

அம்மாவின் பெயர்: அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஒரு மனிதனின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருப்பதாக எனது தந்தை நம்பினார். அதேபோல் அவரது வெற்றிக்கு பின் என் அம்மா இருந்தார். அதனால்தான் அம்மாவின் பெயரான அண்ணபூர்ணா இந்த ஸ்டூடியோஸுக்கு வந்தது. இங்கு நான் வரும்போதெல்லாம் அம்மாவும், அப்பாவும் இங்கே இன்னமும் இருக்கிறார்கள் என்று உணர்கிறேன். இங்கிருக்கும் அனைத்துமே அவர்களுக்கு பிடிக்கும்.

ஒரு குடும்பம்: அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் பணியாற்றுபவர்களை நாங்கள் ஒரு குடும்பமாகவே உணர்கிறோம். இன்று இந்த ஸ்டூடியோ நன்றாக இருக்கிறது என்றால் அதற்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் படை வீரர்கள். அவர்களுக்கு எனது நன்றி. 50 ஆண்டுகளுக்கு முன்பு சங்கராந்தி பண்டிகையில்தான் இந்த ஸ்டூடியோஸ் திறக்கப்பட்டது. அன்றிலிருந்து அம்மாவும் அப்பாவும் ஒவ்வொரு சங்கராந்திக்கும் இங்கு வந்து காலை உணவு சாப்பிடுவார்கள். அந்த பாரம்பரியம் இப்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X