ஒரே மேடையில் இரண்டு திருமணமா?.. நாகார்ஜுனா போட்டிருக்கும் பிளான் இதுதான்

ஹைதராபாத்: சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றார் நாக சைதன்யா. பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். இருவரது திருமணமும் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் டிசம்பர் நான்காம் தேதி நடக்கவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க நாகார்ஜுனாவுக்கும் - அமலாவுக்கும் பிறந்த அகிலுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதனையடுத்து ஒரே மேடையில் நாக சைதன்யாவுக்கும், அகிலுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்பட்டது.

நாகார்ஜுனாவுக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதல் மனைவியை பிரிந்த அவர் இரண்டாவதாக நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் நாக சைதன்யா. நாகார்ஜுனாவுக்கும் அமலாவுக்கும் பிறந்தவர் அகில். இவர்களில் நாக சைதன்யா தெலுங்கு திரையுலகில் ஃபேமஸ் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக தண்டெல் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

nagarjuna naga chaitanya akhil

சமந்தாவுடன் விவாகரத்து: நாக சைதன்யா சமந்தாவை காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். திருமணத்துக்கு பிறகும் சமந்தா நடித்ததுதான் இந்த விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது. அதனையடுத்து நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார் சைதன்யா. இரண்டு பேரின் காதலுக்கும் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமண வேலைகள் ஆரம்பித்தன.

சில நாட்களில் திருமணம்: இருவரது திருமணம் முதலில் ராஜஸ்தானில் நடப்பதாக இருந்தது. ஆனால் நாகார்ஜுனாவின் குடும்ப விருப்பப்படி இப்போது ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் டிசம்பர் நான்காம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. இதில் பாலிவுட் முதல் கோலிவுட்வரை பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். மேலும் இந்தத் திருமணத்தை நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்ய திட்டமிருப்பதாக வெளியான தகவல் பொய் என்று தெரியவந்தது.

அகிலுக்கும் நிச்சயதார்த்தம்: சூழல் இப்படி இருக்க அகில் ஓவியர் ஜெய்னப் ராவத்ஜி என்பவரை காதலித்தார். ஏற்கனவே அகிலுக்கு ஒரு நிச்சயதார்த்தம் நடந்து திருமணம்வரை செல்லாமல் தடைபட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் ஜெய்னப்பை காதலித்தார். இந்தக் காதலுக்கும் நாகார்ஜுனாவின் வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் அகிலுக்கும், நாக சைதன்யாவுக்கும் ஒரே மேடையில் ஒரே நாளில் திருமணம் என்று கூறப்பட்டது.

நாகார்ஜுனா விளக்கம்: இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் நாகார்ஜுனா, "அகில் திருமணமும், நாக சைதன்யா திருமணமும் ஒரே நாளில் ஒரே மேடையில் நடக்காது. அகிலின் திருமணத்தை பிறகு நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அகிலை நினைத்து ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. அகிலுக்கு மனைவியாகப்போகும் ஜெய்னப் ரொம்பவே நல்ல பெண். அவர்கள் இருவரும் கணவன், மனைவியாக ஆகப்போவதை நினைத்து எங்களுக்கு உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது"என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X