சமந்தாவும் நாகசைதன்யாவும் விவகாரத்து செய்ய போகிறார்களா? பதிலளிக்காமல் நழுவிய நாகார்ஜூனா!

சென்னை: நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்ய போகிறார்களா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவி சென்றுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா.

அந்த படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். விண்ணைத் தாண்டி வருவாயா படம் தெலுங்கில் யே மாயா சேசவே என்ற பெயரில் உருவானது.

முன்னணி நடிகையாக வலம் வரும் சம்மு

முன்னணி நடிகையாக வலம் வரும் சம்மு

இந்தப் படத்தில் நடிகை சமந்தா லீடிங் ரோலில் நடித்தார். இதன் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் சமந்தா. முதல் படத்திலேயே பெரும் வெற்றியை பெற்று பிரபலமானார் நடிகை சமந்தா. தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, அஞ்சான், கத்தி, பத்து எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24, மெர்சல் இரும்புத்திரை, சீமராஜா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல்

காத்து வாக்குல ரெண்டு காதல்

தற்போது தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இதேபோல் தெலுங்கில் ஷகுந்தலம் என்ற படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவுடன் நடித்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்தார்.

நாக சைதன்யாவுடன் திருமணம்

நாக சைதன்யாவுடன் திருமணம்

2010ஆம் ஆண்டு வெளியாள யே மாயா சேசவே என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் 7 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருக்கும் ஹைத்ராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் 2017ஆம் ஆண்டு அக்டோபரில் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோவாவில் திருமணம் செய்து கொண்டனர்.

அக்கினேனி பெயர் நீக்கம்

அக்கினேனி பெயர் நீக்கம்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை சமந்தா தனது கணவரை பிரிய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனிடையே நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த அக்கினேனி என்ற குடும்ப பெயரை நீக்கினார். இதனால் குடும்பத்திற்குள் பிரச்சனையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

சமந்தா மீது அதிருப்தி

சமந்தா மீது அதிருப்தி

மேலும் தி பேமிலி மேன் வெப் சீரிஸில் நடிகை சமந்தாவின் கேரக்டருக்கு எழுந்து எதிர்ப்பு மற்றும் புதிய கொரியன் வெப் சீரிஸ் ஒன்றில் நிர்வாணமாக நடிப்பதாக வெளியான தகவல் போன்ற காரணங்களால் நாக சைதன்யாவின் குடும்பத்தினர் சமந்தா மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.

மீடியாவின் கோர முகம்

மீடியாவின் கோர முகம்

இந்நிலையில் அண்மையில் தனது சமூக வலைதள பக்கத்தில் மீடியாவை கோரமான முகத்துடன் சித்தரித்து வீடியோ வெளியிட்டிருந்தார் நடிகை சமந்தா. இதனை பார்த்த ரசிகர்கள் விவாகரத்து தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதற்காக சாடியுள்ளார் என கருத்து தெரிவித்து வந்தனர்.

பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர்

பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர்

இந்நிலையில் நடிகரும் நடிகை சமந்தாவின் மாமானாருமான நாகார்ஜூனாவின் செயல்பாடு குடும்பத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் நாகார்ஜூனா தெலுங்கு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.

அந்த கேள்விகளை தவிர்க்கவே..

அந்த கேள்விகளை தவிர்க்கவே..

இந்நிலையில் ஊடகங்களை சந்திப்பதில் இருந்தும் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதில் இருந்தும் விலகியுள்ளார் நடிகர் நாகார்ஜூனா. அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் தவிர்த்தற்கு கொரோனா அச்சுறுத்தல் ஒரு காரணம் என்றாலும் ரசிகர்கள் அதனை ஏற்கவில்லை. சமந்தா மற்றும் நாக சைதன்யா குறித்து பரவி வரும் விவாகரத்து தொடர்பான கேள்விகளை தவிர்க்கவே நாகார்ஜூனா மீடியாவை தவிர்ப்பதாக கூறி வருகின்றனர்.

இருவரும் பிரிய ஹிண்ட்டா?

இருவரும் பிரிய ஹிண்ட்டா?

நாக சைதன்யா - சமந்தா இடையே எந்த பிரச்சனையும் இல்லாவிட்டால் அவர் அதெல்லாம் வதந்தி என்று கூறி விட்டு செல்லலாமே என்றும் கூறி வருகின்றனர். மேலும் ஊடகங்களைத் தவிர்க்கும் அவரது நடவடிக்கை, இருவரும் பிரிந்து தங்களின் தனி வழியில் செல்லத் திட்டமிடுவதற்கான முக்கிய ஹிண்டாக கருதப்படலாம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X