எவ்வளவு பாசம் யப்பா.. மருமகளை எப்படி பார்த்துக்குறார் பாருங்க நாகார்ஜுனா.. ட்ரெண்டாகும் வீடியோ
ஹைதராபாத்: நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த சூழலில் திருமணம் விரைவில் நடக்கவிருக்கிறது. அநேகமாக அவர்களது திருமணம் ராஜஸ்தானில் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ஏஎன்ஆர் விருது நிகழ்ச்சியில் நாகார்ஜுனாவும், சோபிதாவும் இருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் பெரிய குடும்பங்களில் ஒன்று நாகார்ஜுனாவின் குடும்பம். நாகார்ஜுனாவின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் நாக சைதன்யா. அவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. அவர்களது பிரிவுக்கு காரணங்களாக பல யூகங்கள் சொல்லப்பட்டன. அதில் முக்கியமானது திருமணத்துக்கு பிறகும் சமந்தா நடிப்பதை நிறுத்தவில்லை என்பதுதான் என கூறப்படுகிறது.

சோபிதாவுடன் காதல்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா அடுத்ததாக நடிகை சோபிதா துலிபாலாவை காதலிக்க ஆரம்பித்தார். சில காலம் இருவரும் ஒன்றாக டேட்டிங்கும் செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டானாலும் தங்களது காதல் பற்றி இரண்டு பேருமே வாய் திறக்காமல் இருந்தனர். இருந்தாலும் இருவரும் காதலிப்பது உறுதிதான் என்று தெலுங்கு திரையுலகில் பரவலாக பேசப்பட்டுக்கொண்டே இருந்தது.
நிச்சயதார்த்தம்: இதனையடுத்து அதனை உறுதி செய்யும் விதமாக சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்து முடிந்தது. அந்த நிச்சயதார்த்தத்தில் இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டார்கள். நிச்சயதார்த்தத்தை நடத்திவிட்டு பேசிய நாகார்ஜுனா, 'நாக சைதன்யாவுக்கான மகிழ்ச்சியை ஒருவழியாக மீண்டும் கொடுத்துவிட்டோம்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். மேலும் ஒரு சமயத்தில் நாக சைதன்யா மட்டுமின்றி எங்கள் குடும்பமே மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக சமந்தாவுடனான தனது மகன் பிரிவு குறித்தும் அவர் பேசியிருந்தார்.
திருமணம்: நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து அவர்களது திருமணம் எப்போது நடக்கும் என்பதுதான் இப்போது தெலுங்கு திரையுலகின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. அவர்களது திருமணம் முதலில் ஹைதராபாத்தில் நடக்கலாம் என்று பேச்சு எழுந்தது. ஆனால் ராஜஸ்தானில் நடத்துவதற்கு சோபிதா துலிபாலா விருப்பம் தெரிவித்ததாகவும்; அதற்கு நாகார்ஜுனாவின் குடும்பம் முழு சம்மதம் தெரிவித்துவிட்டது; மிக விரைவில் அவர்களின் திருமணம் நடக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
சிரஞ்சீவியிடம் அறிமுகம்: இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் ஏஎன்ஆர் விருது நிகழ்ச்சி நடந்தது. அதில் சோபிதா துலிபாலா, நாகார்ஜுனா, நாக சைதன்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அப்போது சிரஞ்சீவியிடம் தனது மருமகள் சோபிதாவை வாஞ்சையுடனும், மகிழ்ச்சியுடனும் நாகார்ஜுனா அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் மருமகளை அவ்வளவு அன்போடு பார்த்துக்கொள்கிறாரே நாகார்ஜுனா என்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்துவருகின்றன.
சோபிதா போட்ட கண்டிஷன்?: இதற்கிடையே இன்னொரு தகவலும் உலாவிக்கொண்டிருக்கிறது. அதாவது திருமணம் முடிந்த கையோடு தனிக்குடுத்தனம்தான் நடத்த வேண்டும் என்று சோபிதா கண்டிஷன் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சோபிதா துலிபாலாவும் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்து ஃபேமஸும் ஆனார்.


Click it and Unblock the Notifications











