கூலி படத்தில் குபேரா நடிகர்.. தனுஷை தொடர்ந்து ரஜினிகாந்த் படத்தில் நாகார்ஜுனா.. லோகி சம்பவம்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' படத்தில் நாகார்ஜுனா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தில் இருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் முன்னணி நடிகர்களை களமிறக்கி வருகிறார்.

ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்டோர் நடித்த நிலையில், வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

coolie nagarjuna rajinikanth

அதே பாணி தான் தற்போது கூலி படத்திற்கும் தொடர்கிறது என்பதை தொடர்ந்து வெளியாகும் காஸ்டிங் அப்டேட்டை பார்த்தாலே தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

குறைந்த எல்சியூ ஹைப்: கைதி, விக்ரம் படங்கள் மூலம் பில்டப்பான எல்சியூ ஹைப் லியோ படத்தில் குறைய ஆரம்பித்து விட்டது. லோகேஷ் கனகராஜுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் லியோ படத்தின் இரண்டாம் பாதியை பார்த்து விட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் முன் வைத்தனர். இந்நிலையில், லியோ படத்தில் சந்தித்த சரிவை சரி செய்யும் விதமாக கூலி படத்திற்கு கடுமையாக உழைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

சிங்க பாதை: தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்விக்குப் பிறகு இனிமேல் சிங்க பாதை தான் என்பது போல நடிகர் ரஜினிகாந்த் தான் ஹீரோவாக நடிக்கும் படங்களில் மல்டி ஸ்டார் நடிகர்களை வைத்து வெயிட்டுக் காட்ட வேண்டும் என முடிவு செய்து தொடர்ந்து முன்னணி நடிகர்களை படங்களில் கொண்டு வந்து ஒவ்வொரு ஸ்டேட் ரசிகர்களையும் படங்களை பார்க்க வைத்து வருகிறார்.

கூலி படத்தில் நாகார்ஜுனா: தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் குபேரா படத்தில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் நாகார்ஜுனா 'சைமன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது அறிவித்துள்ளார்.

coolie nagarjuna rajinikanth

மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்: கூலி படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் பற்றிய அறிவிப்பை நேற்று முதல் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு வருகிறார். நேற்று வெளியான கூலி படத்தின் நடிகர்கள் குறித்த அறிவிப்பில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் சுபாஷ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் செளபின் சாஹிர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

coolie nagarjuna rajinikanth

சல்மான் கான்: மலையாளத்தில் இருந்து செளபின் சாஹிர் மற்றும் தெலுங்கில் இருந்து நாகார்ஜுனா நடிக்கவுள்ள நிலையில், இந்தியில் இருந்து பாலிவுட் நடிகர் சல்மான் கான் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் ஏற்கனவே கூலி படத்தில் நடித்து வருவதாக அவரே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஹீரோயின்களாக இந்த முறை யாரெல்லாம் இணையப் போகின்றனர் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X