சோபிதா குறித்து நாகர்ஜுனா சொன்ன அந்த வார்த்தை.. இணையத்தில் உலா வரும் முக்கிய சமாச்சாரம்
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் மிகவும் முக்கியமான நடிகர் நாகர்ஜுனா. இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். இவரது மகன் நாக சைத்தன்யாவும் நடிகர். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதாவது 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாக சைதன்யா தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட பல கோடிகள் தொகையையும் சமந்தாவேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு, விவாகரத்து கொடுத்தார்.
இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நாக சைத்தன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகையான சோபிதா துலிபலாவுடன் கடந்த சில ஆண்டுகளாக டேட் செய்து வந்ததாக கூறப்பட்டு வந்தது. இது குறித்து ஊடகங்கள் தரப்பில் இருந்து கேள்வி கேட்கப்பட்டபோதும் கூட, இருவரும் மறுப்பு தெரிவிக்காமல், வெறுமனே புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்து நழுவி வந்தனர்.

ஆனால் இன்றைய தினம் இணையத்திற்குள் நுழைந்தாலே நாக சைத்தன்யா மற்றும் சோபிதா துலிபலாவுக்கு நிச்சயதார்த்தம் என்ற செய்திகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த நிச்சயதார்த்தம் மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டு நடப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாகர்ஜுனா தெரிவிப்பார் எனவும் கூறப்படுகின்றது.

நாகர்ஜுனா: இந்நிலையில் நாகர்ஜுனா, தனது மகன் நாக சைத்தன்யா டேட் செய்து வருவதாக கூறப்பட்டு தற்போது நிச்சயதார்த்தம் வரை பேசப்படுகின்ற நடிகையான சோபிதா குறித்து இருவரும் இணைந்து நடித்த படத்தின் புரோமோசனில் பேசியது இணையத்தில் மிகவும் வேகமாக ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

கவர்ச்சி: அதாவது இருவரும் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் குட் ஆச்சாரி என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நாகர்ஜுனா பேசுகையில், சோபிதா துலிபலா குறித்து பேசினார். அப்போது இந்தப் படத்தில் சோபிதா துலிபலா சிறப்பாக நடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் இந்தப் படத்தில் அவர் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். அனைவரையும் கவரும் விதமாக நடித்துள்ளார். அவருக்குள் இன்னும் பல திறமைகள் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

வருங்கால மருமகள்: நாகர்ஜுனா இவ்வாறு பேசிய வீடியோ இணையத்தில் இன்னும் உலா வருகின்றது. இந்த சம்பவம் நடைபெற்று ஆறு ஆண்டுகள் ஆகின்றது. அப்போது நாக சைத்தன்யா சமந்தாவுடன் திருமண வாழ்க்கையில் இருந்தார். ஆனால் இன்றைக்கு நாக சைத்தன்யாவும் சோபிதா துலிபலாவும் திருமணம் செய்யவுள்ளார்கள், அவர்கள் இருவருக்கும் நிச்யதார்த்தம் நடைபெறவுள்ளது என்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றது. இந்த நேரத்தில் நாகர்ஜுனா தனது வருங்கால மருமகள் குறித்து என்ன சொல்லி இருக்காரு பாருங்க என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இரண்டாவது திருமணம்: ஆனால் இந்த தகவல் குறித்து இரு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளிவரவில்லை, அதேநேரத்தில் இரு தரப்பினரும் மறுப்பும் தெரிவிக்காமல் உள்ளதால், பலர் இந்த தகவலை உண்மை என பேசி வருகின்றனர். ஒரு சிலரோ முதல் திருமணமாக இருந்திருந்தால் சொல்லி இருப்பார்கள். இரண்டாவது திருமணம் என்பதால் காதும் காதும் வைத்ததைப்போல் அனைத்து ஏற்பாடுகளும் நடப்பதாக பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











