நாக சைதன்யா திருமண தேதி எப்போ?.. அவசர அவசரமாக நிச்சயதார்த்தம் நடைபெற காரணம் என்ன.. நாகார்ஜுனா பளிச்!

சென்னை: நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 8ம் தேதி அவசர அவசரமாக நடந்தது ஏன் என்பதற்கு நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். மேலும், சோபிதா துலிபாலா குறித்தும் திருமண தேதி குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

37 வயதாகும் நாக சைதன்யா ஏற்கனவே நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், அந்த திருமணம் இருவருக்கும் சிறப்பான ஒன்றாக அமையவில்லை.

Naga Chaitanya Sobhita Dhulipala Nagarjuna

4 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு நடிகை சமந்தாவை நாக சைதன்யா விவாகரத்து செய்து பிரிந்தார். 2021ம் ஆண்டு விவாகரத்து நடைபெற்ற நிலையில், 2024ம் ஆண்டு நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார்.

நாக சைதன்யா நிச்சயதார்த்தம்: நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மனைவியின் மகனான நாக சைதன்யா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஜோஷ் படத்தில் அறிமுகமான நாக சைதன்யா இந்தியில் அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி படத்தில் நாயகனாக நடித்திருந்தார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் ஹீரோவாக நடித்த போது அந்த படத்தின் நாயகியான சமந்தாவை திருமணம் செய்துக் கொண்ட நாக சைதன்யா சில ஆண்டுகள் கழித்து அவரை விவாக்ரத்து செய்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி சோபிதா துலிபாலாவை நிச்சயம் செய்துக் கொண்டார்.

அவசர அவசரமாக ஏன்?: நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பு கடைசி வரை நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் காதல் போலவே ரகசியமாக இருந்து வந்த நிலையில், மீடியாக்களில் கசிந்து விட்டன. வேறு வழியில்லாமல் நிச்சயதார்த்தம் முடிந்த உடனே அதிகாரப்பூர்வமாக புகைப்படங்களை வெளியிட்டு நாகார்ஜுனா அறிவித்திருந்தார். இந்நிலையில், செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவசர அவசரமாக இந்த நிச்சயதார்த்தம் நடைபெற காரணமே 8-8-8 எனும் அந்த மிகவும் சக்தி வாய்ந்த நாள் மிஸ் ஆகி விடக் கூடாது என்பதற்காகத்தான் எனக் கூறியுள்ளார்.

திருமணம் எப்போது?: பொதுவாகவே திருமண நிச்சயதார்த்தம் என்றால் திருமண தேதியை குறிப்பது தான். ஆனால், இப்போதைக்கு திருமண தேதியை முடிவு செய்யவில்லை என்றும் கூடிய சீக்கிரம் அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் இப்போதைக்கு நிச்சயம் மட்டுமே செய்திருக்கிறோம் என நாகார்ஜுனா பதில் அளித்துள்ளார்.

சோபிதாவை முன்னாடியே தெரியும்: நாக சைதன்யாவுக்கு சோபிதா துலிபாலாவை கடந்த 2 ஆண்டுகளாகத் தான் தெரியும். ஆனால், எனக்கு 6 வருடங்களாகவே தெரியும். ஆத்வி சேஷ் நடித்த கோடாச்சாரி படத்தில் அவர் நடிக்கும் போதே அவரை பற்றித் தெரியும். நல்ல திறமையான நடிகை, பண்பான பெண் என வருங்கால மருமகள் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் நாகார்ஜுனா.

குடும்ப புகைப்படம்: நாகார்ஜுனா அவரது மனைவி அமலா அக்கினேனி உள்ளிட்டோருடன் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருக்கும் குடும்ப புகைப்படங்களையும் நிச்சயத்துக்குப் பிறகு வெளியிட்டுள்ளனர். நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் சினிமாவில் பிசியாக உள்ள நிலையில், அந்த வேலைகளை எல்லாம் முடித்து விட்டு திருமணம் செய்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X