2வது மருமகள் வந்த நேரம்.. மகனுக்கு வெற்றிக் கிடைத்தது.. சோபிதாவுக்கு ஐஸ் வைத்த மாமா நாகார்ஜுனா!

ஹைதராபாத்: நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நாக சைதன்யாவுக்கு சில சூப்பரான படங்கள் கிடைத்தன. ஆனால், சமந்தாவை அவர் விவாகரத்து செய்து பிரிந்ததில் இருந்தே தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறார். இந்நிலையில், சோபிதாவை திருமணம் செய்த பின்னர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான தண்டேல் திரைப்படம் தேறுமா? தேறாதா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் நாகார்ஜுனா தனது மகன் ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாக இருப்பதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் இந்த வெற்றிக்கு காரணம் என்னுடைய மருமகள் சோபிதா துலிபாலா வந்த நேரம் என்றும் சொல்லலாம் என பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Naga Chaitanya Sobhita Dhulipala Nagarjuna

சோபிதாவின் சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் முன்னதாக புரமோஷனுக்கு சென்ற போது கூட நாக சைதன்யா சோபிதாவின் சொந்த ஊர் என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டு விசாகப்பட்டினம் மக்கள் தன்னை கைவிட மாட்டார்கள் என நம்புவதாக தெரிவித்திருந்தார்.

Naga Chaitanya Sobhita Dhulipala Nagarjuna

50 கோடி வசூல்: சந்து மொண்டட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் பிப்ரவரி 7ம் தேதி வெளியான படம் தான் தண்டேல். பாகிஸ்தான் போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளும் மீனவரான நாக சைதன்யாவை மீட்க சாய் பல்லவி நடத்தும் போராட்டம் தான் இந்த படம். காதல் காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், 47 கோடி ரூபாய் வரை இதுவரை இந்த படம் வசூல் செய்துள்ளது. 50 கோடி வசூலை இன்றுடன் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Naga Chaitanya Sobhita Dhulipala Nagarjuna

சோபிதா வந்த நேரம்: நடிகர் நாகார்ஜுனா மூத்த மருமகள் சமந்தா இருக்கும் போது அவருக்கு சப்போர்ட்டாக பேசி வந்தார். பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியையே இவர் நடத்த வரமுடியவில்லை என்றால் சமந்தாவே சென்று சில ஷோக்களை நடத்தியுள்ளார். சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த நாகார்ஜுனா 2வதாக சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தண்டேல் படத்தின் வெற்றிக்கு இயக்குநர், தயாரிப்பாளர், என் மகன் நாக சைதன்யா, சாய் பல்லவி எல்லாம் எப்படி ஒரு காரணமோ அதே போல என் மருமகள் சோபிதா வந்த நேரமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது என நாகார்ஜுனா கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X