மருமகள் சமந்தாவை வைத்து மாஸ்டர் பிளான் போடும் நாகர்ஜுனா?

By Siva

Recommended Video

Samantha Viral Video in Gym

ஹைதராபாத்: நாகர்ஜுனா தனது தயாரிப்பு நிறுவனத்தின் நிலையை சரி செய்ய ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளாராம்.

நாகர்ஜுனாவின் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து கொண்டிருக்கிறது. அவர் தயாரித்து, நடித்த மன்மதுடு 2 படமும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. மருமகள் வந்த பிறகு இப்படி பிளேபாயாக நடிப்பது எல்லாம் தேவையா என்று பலரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் நாகர்ஜுனா.

மன்மதுடு 2 படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் பெரிய அடி வாங்கியுள்ளார் நாகர்ஜுனா.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

மன்மதுடு 2

மன்மதுடு 2

நாகர்ஜுனா ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் மன்மதுடு 2 வெளியானது. மன்மதுடு 2 நிச்சயம் ஹிட்டாகும் என்று எதிர்பார்த்த நாகர்ஜுனாவுக்கு பேரதிர்ச்சியாகிவிட்டது. இந்நிலையில் அவர் தனது தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸின் பெயரை காப்பாற்ற மருமகள் சமந்தாவை வைத்து படம் எடுக்கப் போகிறாராம்.

சமந்தா

சமந்தா

தெலுங்கு திரையுலகை பொறுத்த வரை சமந்தா ராசியான நடிகை. அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுகின்றன. இந்நிலையில் தான் நாகர்ஜுனா தான் தயாரிக்கும் படத்தில் சமந்தாவை மைய கதாபாத்திரமாக நடிக்க வைக்கப் போகிறாராம். இது குறித்து நாகர்ஜுனாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது, இது நாகர்ஜுனாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக். மஜிலி படம் மூலம் கணவர் நாக சைதன்யாவின் கெரியருக்கு உதவி செய்தார் சமந்தா. தற்போது மாமனாருக்கு உதவி செய்யப் போகிறார் என்றார்.

நாகர்ஜுனா

நாகர்ஜுனா

நாகர்ஜுனா தயாரிக்கப் போகும் படத்தில் அவர், நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நாகர்ஜுனாவின் 60வது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்தார் அனைவரும் ஸ்பெயினுக்கு சென்றுள்ளனர். நாடு திரும்பிய பிறகு புதுப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நாகர்ஜுனா தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில்

அகில்

நாகர்ஜுனா மட்டும் அல்ல அவரின் இளைய மகன் அகிலின் கெரியரும் பிக்கப் ஆகாமல் உள்ளது. அவர் நடிக்கும் படங்கள் சரியாக போவது இல்லை. ஒரு பிரேக் கிடைக்காமல் அல்லாடி வருகிறார் அகில். அகில் தற்போது பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X