அப்பா நாகார்ஜுனும் ரெண்டு கல்யாணம்.. மகன் நாக சைதன்யாவும் ரெண்டு கல்யாணம்.. பட்டியலிடும் ரசிகர்கள்!
ஹைதராபாத்: தென்னிந்தியா மட்டும் இல்லாமல் வட இந்திய திரையுலகிலேயேயும் இன்றைக்கு மிகவும் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டு இருப்பது என்னவென்றால், அது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் தொடர்பாகத்தான். கடந்த சில தினங்களாகவே இது தொடர்பான தகவல்கள் இணையத்திலும் பல்வேறு ஊடகங்களிலும் உலா வந்தாலும், இன்றைக்கு காலையில் இருந்து அதிகம் பேசப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக இன்று அதாவது ஆகஸ்ட் 8ஆம் தேதி மதியம் நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் நிச்சய்தார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பலரும் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் மிகவும் முக்கியமான நடிகர் நாகார்ஜுனா. இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். இவரது மகன் நாக சைதன்யாவும் நடிகர். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதாவது 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாக சைதன்யா தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட பல கோடிகள் தொகையையும் சமந்தா வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு, விவாகரத்து கொடுத்தார்.

இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகையான சோபிதா துலிபாலாவுடன் கடந்த சில ஆண்டுகளாக டேட் செய்து வந்ததாக கூறப்பட்டு வந்தது. இது குறித்து ஊடகங்கள் தரப்பில் இருந்து கேள்வி கேட்கப்பட்டபோதும் கூட, இருவரும் மறுப்பு தெரிவிக்காமல், வெறுமனே புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்து நழுவி வந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்நிலையில் இருவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெறுள்ளது.

நாகார்ஜுனா: நாக சைதன்யா நிச்சயதார்த்தம் தொடர்பாக பலரும் பேசி வரும் நிலையில், இணையத்தில் மற்றொரு செய்தியும் உலா வருகின்றது. அதாவது, நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனாவும் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டார் என்பதுதான் அது. அதாவது நடிகர் நாகார்ஜுனா, கடந்த 1984ஆம் ஆண்டு நடிகர் வெங்கடேஷ் டகுபதியின் தங்கையான லட்சுமி டகுபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்தான் நாக சைதன்யா. ஆனால் இவர்கள் இருவரும் கடந்த 1990ஆம் ஆண்டு பிரிந்தனர்.

இரண்டாவது திருமணம்: அதன் பின்னர், 1992ஆம் நாகார்ஜுனா, நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகில் அக்கினேனி என்ற மகன் பிறந்தார். திருமணத்திற்குப் பின்னர், அமலாவை திரைப்படங்களில் நடிக்ககூடாது என்ற கண்டிஷனைச் சொல்லித்தான் திருமணம் செய்தார் என கூறப்பட்டது. நாகார்ஜுனாவை திருமணம் செய்த பின்னர் அமலாவும் திரைப்படங்களில் நடிக்கவில்லை.
தந்தை வழியில் மகன்: தந்தை எப்படி முதலில் திருமணம் செய்து விவாகரத்து செய்து கொண்டாரோ, அதேபோல் மகனும் முதலில் திருமணம் செய்து விவாகரத்து செய்தார். மேலும் அப்பாவின் இரண்டாவது திருமண வாழ்க்கை பிரிவு இல்லாமல் இதுவரை நீடித்துள்ளதால், நாக சைதன்யாவின் திருமண வாழ்க்கையும் பிரிவில்லாமல் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











