அண்ணனுக்கு 2வது கல்யாணம்.. தம்பிக்கு நிச்சயதார்த்தம்.. நாகார்ஜுனா வீட்டில் கல்யாண கலாட்டா ஆரம்பம்!
ஹைதராபாத்: நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலா அக்கினேனிக்கு மகனாக பிறந்த அகில் அக்கினேனிக்கு நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்று முடிந்ததாக மகன் மற்றும் மருமகள் புகைப்படத்தை ஷேர் செய்து நாகார்ஜுனா தனது சந்தோஷத்தை சற்றுமுன் அறிவித்துள்ளார்.
நாகார்ஜுனாவின் முதல் மனைவிக்கு பிறந்த நாக சைதன்யா நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், நடிகை சோபிதா துலிபாலாவை வரும் டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், நாக சைதன்யாவின் தம்பி அகில் அக்கினேனியின் நிச்சயதார்த்தமும் அழகாக நடைபெற்றுள்ளதாக நாகார்ஜுனா அறிவித்துள்ள நிலையில், அகில் அக்கினேனி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாக சைதன்யா 2வது திருமணம்: நாகார்ஜுனா லக்ஷ்மி டகுபதியை 1984ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு நாக சைதன்யா மகனாக பிறந்தார். 1990ம் ஆண்டு திருமணமாகி 6 ஆண்டுகளில் லக்ஷ்மியை விவாகரத்து செய்துவிட்டு நடிகை அமலாவை திருமணம் செய்துக் கொண்டார். நாக சைதன்யாவுக்கும் அமலாவுக்கு பிறந்த மகன் தான் அகில் அக்கினேனி. அவரும் டோலிவுட்டில் இளம் ஹீரோவாக வலம் வருகிறார். நடிகை சமந்தாவை நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்தார். அப்பாவை போலவே அவரும் 2வது திருமணம் செய்யப் போகிறார். வரும் டிசம்பர் 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூரணா ஸ்டூடியோவில் தான் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணம் எளிமையான முறையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அகில் அக்கினேனி நிச்சயதார்த்தம்: இந்நிலையில், அண்ணனுக்கு 2வது திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக தன்னுடைய நிச்சயதார்த்தத்தை நடத்திவிட வேண்டும் என அகில் அக்கினேனி நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. இன்று அகில் அக்கினேனி நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் சந்தோஷமாக நடைபெற்றதாக தற்போது தனது மகன் மற்றும் மருமகளின் புகைப்படத்தை நாகார்ஜுனா ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அடுத்த மருமகள் யார்?: ஜைனப் ராவ்த்ஜி (Zainab Ravdjee) என்பவரை அகில் காதலித்து வந்த நிலையில், இன்று தனது காதலியை நிச்சயம் செய்துக் கொண்டார். அண்ணன் நாக சைதன்யா 2வது திருமணம் செய்துக் கொள்ளவுள்ள நிலையில், அந்த திருமணம் முடிந்த கையோடு நடிகர் அகிலும் திருமணம் செய்துக் கொள்வார் எனக் கூறப்படுகிறது. நடிகர் நாகார்ஜுனாவின் வீட்டில் ஒரே கல்யாண கலாட்டா தான் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











