ஆலியா, ரன்பீரோட வேலை செய்யறது ரொம்ப உற்சாகமா இருக்கு... நாகார்ஜூனா மகிழ்ச்சி
ஐதராபாத் : பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடிகர் நாகார்ஜூனா பிரம்மாஸ்திரம் என்ற புராண கதையில் நடித்து வருகிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரன்பீர், ஆலியா உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடிப்பது உற்சாகமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரன்பீர், ஆலியாவுடன் நடிப்பு
நீண்ட காலங்களுக்கு பிறகு பாலிவுட்டில் மீண்டும் நடித்து வருகிறார் டோலிவுட் நாயகன் நாகர்ஜூனா. அயன் முகர்ஜி டைரக்ஷனில் பிரம்மாஸ்திரா என்ற புராண கதையில் இவர் இணைந்துள்ளார். ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன் உள்ளிட்டவர்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

உற்சாகமாக உள்ளது
இந்நிலையில் ஆலியா, ரன்பீர் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடிப்பது மிகுந்த உற்சாகத்தை தருவதாக நாகார்ஜூனா தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் சிறப்பான எனர்ஜியுடன் செட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய திறமையான நடிகர்களுடன் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிரம்மாஸ்திரம் மையம்
5,000 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருவதாகவும் பிரம்மதேவனின் ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை வைத்திருப்பவர்கள் இந்த உலகத்தையே ஆளும் திறமை மிக்கவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

நடிக்க ஆர்வம்
தான் எப்போதுமே புராண கதைகளில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளதாகவும் ராமாயணம், மகாபாரதத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் நாகார்ஜூனா குறிப்பிட்டுள்ளார். அதனால் இந்த படத்தில் நடிப்பதை தான் தன்னுடைய பெருமையாக கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











