நாகர்ஜுனா முதல் நாக சைதன்யா வரை... அக்கினேனி குடும்பத்தின் விவாகரத்து வரலாறு

ஐதராபாத் : திரையுலகில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் போது ஹீரோ - ஹீரோயின், ஹீரோயின் - டைரக்டர் இடையே காதல் ஏற்படுவது காலம் காலமாக நடந்து வருகிறது. இப்படி காதலிக்கும் சிலரின் காதல், திருமணத்தில் முடிந்துள்ளது. சிலரின் காதல் பாதியிலேயே முறிந்து விடுகிறது.

Recommended Video

Samantha Nagachaitanya பிரிவை குறித்து வருந்திய Samantha தந்தை Prabhu, Nagarjuna

காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்களில் மிக சிலர் மட்டுமே கடைசி வரை சேர்ந்து வாழ்கிறார்கள். சில காலத்திலேயே விவாகரத்து பெற்றவர்களே அதிகம். இப்படி லேட்டஸ்டாக காதல் திருமணம் செய்து கொண்டு, சில காலத்திலேயே பிரிந்த தம்பதி சமந்தா - நாக சைதன்யா.

டோலிவுட் மட்டுமல்ல கோலிவுட்டிலும் கடந்த சில மாதங்களாகவே சமந்தாவின் விவாகரத்து விஷயம் தான் டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது. சோஷியல் மீடியாக்களில் பல விதங்களில் தகவல் பரவியது. ஆனால் நாகர்ஜுனா குடும்பத்தில் விவாகரத்து வாங்கி, பிரிந்து செல்வது ஒன்றும் புதிதல்ல. அக்கினேனி குடும்பத்தின் விவாகரத்து வரலாறு பற்றி தான் இங்கே பார்க்க உள்ளோம்.

நாகர்ஜுனா - லட்சுமி டகுபதி

நாகர்ஜுனா - லட்சுமி டகுபதி

தெலுங்கு தயாரிப்பாளர் டாக்டர்.டி.ராமநாயுடுவின் மகள் லட்சுமி டகுபதியை 1984 ம் ஆண்டு நாகர்ஜுனா திருமணம் செய்து கொண்டார். லட்சுமி டகுபதி, நடிகர் வெங்கடேஷின் சகோதரி ஆவார். இவர்களுக்கு பிறந்த மகன் தான் நாக சைதன்யா. திருமணமான 6 ஆண்டுகளில் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இரண்டு ஆண்டுகளில் நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார் நாகர்ஜுனா. பல ஹிட் படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். இவர்களின் மகன் அகில் அக்கினேனியும் நடிகராகி உள்ளார்.

சுமந்த் - கீர்த்தி ரெட்டி

சுமந்த் - கீர்த்தி ரெட்டி

நாகர்ஜுனாவின் உறவினரான சுமந்த் யர்லகட்டா, 2004 ம் ஆண்டு நடிகை கீர்த்தி ரெட்டியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண உறவு இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கீர்த்தி ரெட்டி, அமெரிக்காவில் செட்டில் ஆனார். ஆனால் சுமந்த் தற்போது வரை தனியாகத் தான் வாழ்ந்து வருகிறார்.

சுப்ரியா யர்லகட்டா

சுப்ரியா யர்லகட்டா

சுமந்த்தின் சகோதரியான சுப்ரியாவின் திருமணம் பற்றி பெரிதாக வெளியுலகிற்கு தெரியாது. ஆன்லைனில் கிடைத்த தகவலின்படி, இவர் சரண் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதற்கு பிறகு அவர் என்ன ஆனார் என தெரியவில்லை. சுப்ரியா தற்போது வரை தனியாக தான் வாழ்ந்து வருகிறார். கலப்பு திருமணமான இந்த திருமணமும் குடும்ப முறைப்படி நடத்தப்பட்டது.

அகில் அக்கினேனி

அகில் அக்கினேனி

நாகர்ஜுனா - அமலாவின் மகனான அகிலுக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை. ஆனால் 2016 ம் ஆண்டு, ஃபேஷன் டிசைனரான ஸ்ரியா புபல் ரெட்டி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர் தொழிலதிபர் ஜிவி கிருஷ்ண ரெட்டியின் பேத்தியாவார். ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த ஓராண்டில் திருமணத்தை நிறுத்திய ரெட்டி குடும்பத்தினர், ஸ்ரியாவிற்கு அனிந்த் ரெட்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் அகில், படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

நாக சைதன்யா - சமந்தா

நாக சைதன்யா - சமந்தா

நீண்ட காலம் நண்பர்களாக இருந்த நாக சைதன்யாவும், சமந்தாவும் 2017 ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோவாவில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. டோலிவுட்டின் மிக க்யூட்டான இந்த காதல் ஜோடி, திருமணத்திற்கு பிறகு Chaysam என்றே ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டனர். திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் இருவரும் பிரிய போவதாக அறிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X