நாகார்ஜுனா வீட்டில் அடுத்த திருமணம்.. எப்போ தெரியுமா?.. வீடே விழாக்கோலம்தான்
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான நாகார்ஜுனாவுக்கு மொத்தம் இரண்டு திருமணங்கள் நடைபெற்றன்.முதலில் திருமணம் செய்தவருக்கு நாக சைதன்யா பிறந்தார். அவர் டோலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அதனையடுத்து அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அகில் என்ற மகன் பிறந்தார். நாக சைதன்யாவுக்கு கடந்த வருடம்தான் நடிகை சோபிதா துலிபாலாவுடன் இரண்டாவது திருமணம் நடந்தது.
டோலிவுட்டின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் நாகார்ஜுனா. இவர் முதலில் லட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நாக சைதன்யா பிறந்தார். அவரும் தனது தந்தை, தாத்தா வழியில் நடிகராக திகழ்ந்துவருகிறார். சூழல் இப்படி இருக்க லட்சுமியை விவாகரத்து செய்த அவர் நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் அகில் அக்கினேனி. இவரும் தெலுங்கு சினிமாவில் நடிகராக வலம் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவுடன் திருமணம்: இதற்கிடையே நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடந்தது. ஆனால் சில காரணங்களால் அவர்களது திருமண உறவு விவாகரத்தில் முடிந்தது. அதற்கு காரணமாக பலரும் பல யூகங்களை சொன்னார்கள். ஆனால் இரண்டு பேருமே அந்த விவாகரத்து குறித்து எதுவும் பேசாமல் கடந்து சென்றுவிட்டனர். தங்களது கரியரிலும் பிஸியாக இருக்கிறார்கள்.
இரண்டாவது திருமணம்: நாக சைதன்யா சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். அவர்களது காதலுக்கு நாகார்ஜுனா சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு கடந்த வருடம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் திருமணம் நடந்தது. நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு சோபிதாவின் கழுத்தில் தாலி கட்டினார் நாக சைதன்யா. அந்தத் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினை தெரிவித்தார்கள்.
அகிலுக்கு திருமணம்: சூழல் இப்படி இருக்க நாக சைதன்யாவின் சகோதரரான அகில் அக்கினேனியும் ஓவியர் ஜெய்னப் ராவத்ஜி என்பவரை காதலித்தார். ஏற்கனவே அகிலுக்கு ஒரு நிச்சயதார்த்தம் நடந்து திருமணம்வரை செல்லாமல் தடைபட்டிருந்தது. இதனையடுத்துதான் அவர் ஜெய்னப்பை காதலித்தார். இந்தக் காதலுக்கும் நாகார்ஜுனாவின் வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து நாக சைதன்யாவுக்கு திருமணம் நடக்கும் மேடையிலேயே அகிலுக்கும் திருமணம் நடக்கும் என்று முதலில் கூறப்பட்டது.
எப்போது திருமணம்?: ஆனால் அதனை நாகார்ஜுனா திட்டவட்டமாக மறுத்து சைதன்யாவுடைய திருமணத்துக்கு பிறகுதான் அகிலின் திருமணம் நடக்கும் என்று கூறினார். இந்நிலையில் அகிலின் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அகில் - ஜெய்னப்பின் திருமணம் மார்ச் மாதம் 24ஆம் தேதி நடக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் மும்முரமாக தொடங்கி நடத்திவருவதாக டோலிவுட் வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











