மெட்ரோ வாட்டர் லாரி டிரைவரின் காதலைச் சொல்லும் “நகர்வலம்”!

சென்னை: சென்னை மக்களின் வாழ்க்கை முறையையும், பழக்கவழக்கங்களையும் மையமாக வைத்து வந்துள்ள படங்களின் வரிசையில் புதியதாக இணைய உள்ள திரைப்படம் "நகர்வலம்".

இப்படத்தினை "ரெட் கார்பெட்" நிறுவனம் சார்பில் எம்.நடராஜன் மற்றும் என்.ரமேஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் கதாநாயகனாக டிவி தொடரிலும், காதல் சொல்ல வந்தேன் போன்ற சில படங்களிலும் நடித்த பாலாஜி நடித்து வருகின்றார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் தீக்‌ஷிதா கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

மதுரையிலிருந்து மெட்ராஸுக்குத் தாவிய கோலிவுட்:

கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை மதுரைப் பக்கம் கோலிவுட்கார்ரகள் அதிகம் புழங்கி வந்தனர். இப்போது "மெட்ராஸுக்கு"த் தாவியுள்ளனர். அதாங்க, சென்னை குறித்த படங்கள் நிறைய வர ஆரம்பித்துள்ளன இப்போது.

மெட்ராஸ்

மெட்ராஸ்

கார்த்தி நடிப்பில் இப்படித்தான் மெட்ராஸ் என்ற பெயரில் சென்னையைக் கதையாகக் கொண்ட படம் வந்தது. இப்போது நகர்வலம் என்ற பெயரில் ஒரு படம் வருகிறது.

லாரி டிரைவரின் காதல்:

லாரி டிரைவரின் காதல்:

இத்திரைப்படத்தினை இயக்குனர் மார்க்ஸ் இயக்கி வருகின்றார். மெட்ரோ வாட்டர் லாரி டிரைவரான கதாநாயகனுக்கும், அவர் தண்ணீர் சப்ளை செய்யும் ஒரு ஏரியாவின் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான காதல்தான் படத்தின் கதையாம்.

காதலால் ஏற்படும் பிரச்சினைகள்:

காதலால் ஏற்படும் பிரச்சினைகள்:

அவர்களுடைய காதலால் என்னவெல்லாம் பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்பதையெல்லாம் விளக்கிச் சொல்லியிருக்கின்றாராம் இயக்குனர்.

சென்னை மக்களின் வாழ்க்கை:

சென்னை மக்களின் வாழ்க்கை:

மேலும், இதில் சென்னை மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கானா பாடலை, ‘கானா புகழ்' இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார்.

படத்தின் பின்புலமானவர்கள்:

படத்தின் பின்புலமானவர்கள்:

இப்படத்தில் ஒளிப்பதிவு தமிழ் தென்றல், இசை பவன் , படத்தொகுப்பு மணிகண்ட பாலாஜி , கலை தேவா, சண்டை பயிற்சி "ஃபயர்" கார்த்திக் , நடனம் கல்யாண் , நந்தா,விமல் ராஜ், பாடல்கள் மோகன் ராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இறுதிகட்ட படப்பிடிப்பில்:

இறுதிகட்ட படப்பிடிப்பில்:

சென்னையின் பரபரப்பான பகுதிகளில் படமாகி வரும் இத்திரைப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X