நீண்ட வருடங்களுக்கு பிறகு.. மாஸ்டரில் இணைகிறோம்.. நாகேந்திர பிரசாத் !

சென்னை : நீண்ட ஆண்டுகளுக்குப்பிறகு விஜயின் நண்பனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளேன் என்று நாகேந்திர பிரசாத் கூறியுள்ளார்.

மாஸ்டர் நாகேந்திர பிரசாத் நடன இயக்குனர் நடிகர் என்று இரு துருவங்களில் பயணித்தவர். இவரை முக்கிய வேடங்களில் நடித்து பல படங்களில் பார்த்து இருக்கிறோம். மேலும் 90களில் குழந்தைகளுக்கு பிடித்தமான நாடகமான மாயா மஞ்சித்திரா நாடகத்தில் நடித்து குழந்தைகளை கவர்ந்தவர். மேலும் பல படங்களுக்கு நடன இயக்கமும் செய்து இருக்கிறார் .

Nagendra Prasad plays the Vijays friend

இவர் விஜய் படங்களான குஷி மற்றும் கில்லி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இவர் பிரபு தேவாவின் தம்பி என்பது பலருக்கும் தெரியும். மேலும் தற்போது இவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படமான மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்து வருகிறார். நீண்ட வருடங்கள் கழித்து விஜயுடன் நடித்த அனுபவத்தையும் சமீபத்தில் நேர்காணல்களில் பகிர்ந்து உள்ளார். அத்துடன் நான் விஜய்க்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றி கூற வேண்டும் என்றும் கூறினார்.

இதனை பற்றி கூறிவரும் போது மாஸ்டர் படம் எங்களுக்கு ஒரு ரீயூனியன் போல தான் இருக்கிறது. கில்லி படத்தில் விஜயின் நண்பர்கள் கூட்டத்தில் நடித்திருப்பேன் அதே போல மாஸ்டர் படத்திலும் விஜயுடன் நண்பராக தான் நடித்து வருகிறேன் என்றும் கூறினார். மேலும் அங்கு சஞ்சீவ், ஶ்ரீமன் மற்றும் ஶ்ரீநாத் என பழைய நண்பர்களையும் சந்திக்க நேர்ந்தது என கூறினார்.

Nagendra Prasad plays the Vijays friend

மேலும் தனது ஆரம்ப கால சினிமா அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார் . அதில் அவர் முதன் முதலில் பிரபலமான ஹம்மா ஹம்மா பாடல் பற்றி கூறினார். அப்போது தனக்கு கால் உடைந்துவிட்டதாகவும் அந்த நேரத்தில் பல பிரச்சனைகள் இருந்ததால் என் அப்பா அதனை கண்டு கொள்ளாமல் ஆடு என்று கூறினார் அதிலும் மணிரத்னமும் ஊக்கபடுத்தியதால் நான் அந்த பாடலில் ஆடினேன் என்று கூறினார் .

மேலும் அவர் கூறுகையில் தனது மாயா மச்சிந்திரா நாடகத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். முதலில் எதற்காக நாடகத்தில் நடிகின்றோம் என குழப்பத்தில் நடித்ததாகவும் ஆனால் எனது ஹம்மா ஹம்மா பாடலை விட பலரிடம் கொண்டு சேர்த்தது மாயா மஞ்சித்திரா நாடகம் தான் என்று கூறினார் .
இறுதியாக நாகேந்திர பிரசாத் கூறுகையில் தனது அண்ணன்கள் இருவரும் சிறந்த உழைப்பாளிகள் அதனால் தான் இன்னும் சினிமாவில் வெற்றிபெற்று கொண்டு இருக்கிறார்கள் என்பதனை போல் கூறினார். ஆனால் என் அண்ணன்களை விட அப்பாவிடம் தான் அதிகம் விசயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறார்.

Recommended Video

கல்லூரி மாணவிகளுடன் டேன்ஸ் ஆடிய கஸ்தூரி | Tamil Filmibeat

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X