»   »  பிரபு தேவா தம்பிக்கு கல்யாணம்

பிரபு தேவா தம்பிக்கு கல்யாணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
நடிகர் பிரபு தேவாவின் தம்பியும், பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனும், நடிகருமான நாகேந்திர பிரசாத்திற்கு வருகிற 12ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.

டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனும், ராஜு சுந்தரம், பிரபு தேவாவின் தம்பியுமான நாகேந்திர பிரசாத், தொட்டாச் சிணுங்கி படம் மூலம் நடிகரானார். 123 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சரிவர எடுபடாமல் போனதால் தாய்மொழியான கன்னடத்தில் ஹீரோவாக நடிக்க முயற்சித்தார். அங்கு ஓரிரு படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பிரசாத்திற்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. மைசூரைச் சேர்ந்த மகாதேவ பிரசாத் - சிவம்மா தம்பதியினரின் மகளான ஹேமலதாவுக்கும், நாகேந்திர பிரசாத்திற்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

இவர்களது திருமணம் வருகிற 12ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏவி.எம். ராஜேஸ்வரி மண்டபத்தில் நடக்கிறது. அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read more about: nnagendra prasad

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil