twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கில்லி'ல நடிச்சது...15 வருடத்துக்குப் பின் விஜய்யுடன் இணையும் நடிகர்!

    By
    |

    சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில், பிரபுதேவாவின் தம்பியும் நடன இயக்குனருமான நாகேந்திர பிரசாத் இணைந்துள்ளார்.

    'மாநகரம்' மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார். இதில் நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றது.

    Nagendra prasath roped for Thalapathi 64

    இதையடுத்து அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். சேவியர் ப்ரிட்டோவின் எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இதன் முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் நடக்க இருக்கிறது. இங்கு ஹீரோ விஜய்யும் வில்லன் விஜய் சேதுபதியும் மோதும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக படக்குழுத் தெரிவித்துள்ளது.
    இந்நிலையில் இந்தப் படத்தில் நாகேந்திர பிரசாத் இணைந்துள்ளார். இவர் நடிகர் மற்றும் இயக்குனரான பிரபுதேவாவின் தம்பி.

    நடன இயக்குனராகப் பணியாற்றிய இவர், பம்பாய் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். பின்னர் தொடர்ந்து சில படங்களில் நடனம் ஆடியிருந்த இவர், போகன், குலேபகாவலி படங்களில் நடித்திருந்தார். இப்போது, தளபதி 64 படத்தில் இணைந்துள்ளார்.

    இதற்கு முன் விஜய்யுடன் அவர் கில்லி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் 2004 ஆம் வருடம் ரிலீஸ் ஆனது. 15 வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் அவர். ஷிவமோகாவில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்கிறார்.

    English summary
    Actor Nagendra prasath, brother of director, actor Parabhu deva is doing important role in Thalapathi 64. He will join the team in second schedule of the film in Karnataka.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X