திருட்டுபயலே படத்தை ஓவர் டேக் செய்த நாகேந்திரனின் ஹனிமூன்! 5 பொண்டாட்டி மலையாள வெப் சீரீஸ் ரிவ்யூவ்!

கொச்சி: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேற்று முதல் அதாவது ஜூலை 19ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டுள்ள வெப் சீரிஸ் ஆகியுள்ள இந்த மலையாள வெப் சீரீஸ் நாகேந்திரனின் ஹனிமூன். தமிழ், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவை வெப் சீரிஸாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கதாநாயகனாக சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார். நிதின் ரெஞ்சி பணிக்கர் இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸ் எப்படி உள்ளது என்பதை இங்கு பார்க்கலாம்.

மொத்தம் 7 எப்பிசோட்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸில் சுராஜ் வெஞ்சரமூடுடன் கிரேஸ் ஆண்டனி, கனி குஸ்ருதி, ஸ்வேதா மேனன், ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிடிஎஃப் வாசனின் காதலி ஜோயா சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு எப்பிசோடும் சுமார் ஏறக்குறைய 30 நிமிடங்கள் ஓடுகின்றது.

Suraj Venjaramoodu Disney Plus Hot star Review

கதை: இந்த வெப் சீரீஸ் 1978 காலத்தில் நடக்கின்றது. கதையின் படி, சுராஜ் வெஞ்சரமூடு, நாகேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் எந்த வேலைக்கும் போகாமல் சோம்பேறியாக உள்ளார். மேலும் திருமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணுக்கு சம்பாதித்து கொடுக்க வேண்டும் என திருமணமும் செய்யாமல் இருக்கின்றார். இப்படியான நாகேந்திரனுக்கு தனது நண்பனைப் போல் குவைத்திற்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது.

வரதட்சணை: இதற்காக விசா ஏற்பாடு செய்ய பணம் தேவைப்படுகின்றது. இதனால் திருமணம் செய்து கொண்டால் வரதட்சனைக் கிடைக்கும் அந்தப் பணத்தைக் கொண்டு குவைத்திற்குச் சென்று விடலாம் என முடிவெடுத்து தனது மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்கின்றார். இப்படி இருக்கும்போது மாமன் வறுமையில் இருப்பதால் வரதட்சணை கொடுக்கமுடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த நாகேந்திரனுக்கு அவனது புரோக்கர் நண்பன் சோமனின் அறிவுரையைக் கேட்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்கின்றார்.

Suraj Venjaramoodu Disney Plus Hot star Review

எப்படி இருக்கு? அதன் பின்னர் ஒரு கொலைகாரி, ஏற்கனவே கர்பமான பெண், விபச்சாரி என இவ்வாறாக 5 திருமணங்கள் செய்து கொள்கின்றார். அதன் பின்னர் இறுதியாக ஆறாவதாக ஒரு திருமணம் செய்து கொள்கின்றார். இத்தனை திருமணங்கள் செய்த நாகேந்திரன் பணத்தை தயார் செய்தாரா இல்லையா? அல்லது குவைத்திற்குச் சென்றாரா இல்லையா என்பது மீதிக்கதையாக உள்ளது. இதில் க்ளைமேக்ஸில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் உள்ளது. படம் முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்படுள்ளது. தான் ஏற்றுக்கொண்ட நகேந்திரன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொறுந்திப் போகின்றார் சுராஜ். சீரிஸ் முழுவதும் இசையில் பிரமாதப் படுத்தியுள்ளார் ரஞ்சின் ராஜ். இரண்டு நெடிய காட்சிகளில் ஒரு வசனம் கூட இல்லாமல் இருக்கின்றது. அந்த இடங்களில் இசையால் நம்மை நிரப்பி விடுகின்றார்.

இந்த வெப் சீரிஸிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவையாக இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது என்றாலும் பாதி இடங்களில் மட்டுமே நகைச்சுவை எடுபட்டுள்ளது. மொத்தத்தில் இந்த வெப் சீரிஸ் ஒருமுறை பார்ப்பதற்கான அம்சங்களைக் கொண்டுள்ளது. தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த வெப் சீரிஸ் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X