நாகேந்திரனும் ஹனிமூனும்! கனவை அடைய 5 பொண்டாட்டி! பக்கா நகைச்சுவை வெப் சீரீஸ் ரிலீஸ்!

கொச்சி: நாகேந்திரனும் ஹனிமூனும் என்ற வெப் சீரீஸ். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இன்று அதாவது ஜூலை 19ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள இந்த மலையாள வெப் சீரீஸ் தமிழ், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவை வெப் சீரிஸாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கதாநாயகனாக சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார். நிதின் ரெஞ்சி பணிக்கர் இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார்.

மொத்தம் 7 எப்பிசோட்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸில் சுராஜ் வெஞ்சரமூடுடன் கிரேஸ் ஆண்டனி, கனி குஸ்ருதி, ஸ்வேதா மேனன், ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு எப்பிசோடும் சுமார் ஏறக்குறைய 30 நிமிடங்கள் ஓடுகின்றது.

Suraj Venjaramoodu Disney Plus Hot star OTT

கதை: இந்த வெப் சீரீஸ் 1978 காலத்தில் நடக்கின்றது. இந்த காலகட்டத்திற்கு ஏற்றவகையில் படத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்களின் காஸ்டூம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கதையின் படி, சுராஜ் வெஞ்சரமூடு நாகேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Suraj Venjaramoodu Disney Plus Hot star OTT

இவர் எந்த வேலைக்கும் போகாமல் திருமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணுக்கு சம்பாதித்து கொடுக்க வேண்டும் என திருமணமும் செய்யாமல் இருக்கின்றார். இப்படியான நாகேந்திரனுக்கு தனது நண்பனைப் போல் குவைத்திற்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது.

Suraj Venjaramoodu Disney Plus Hot star OTT

வரதட்சணை: இதற்காக விசா ஏற்பாடு செய்ய பணம் தேவைப்படுகின்றது. இதனால் திருமணம் செய்து கொண்டால் வரதட்சனைக் கிடைக்கும் அந்தப் பணத்தைக் கொண்டு குவைத்திற்குச் சென்று விடலாம் என முடிவெடுத்து தனது மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்கின்றார்.

Suraj Venjaramoodu Disney Plus Hot star OTT

இப்படி இருக்கும்போது மாமன் வறுமையில் இருப்பதால் வரதட்சணை கொடுக்கமுடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த நாகேந்திரனுக்கு அவனது புரோக்கர் நண்பன் அடுத்த திருமணம் செய்து வைக்கின்றார்.

Suraj Venjaramoodu Disney Plus Hot star OTT

எப்படி இருக்கு? இவ்வாறாக 5 திருமணங்கள் செய்து பணத்தை தயார் செய்தாரா இல்லையா? அல்லது குவைத்திற்குச் சென்றாரா இல்லையா என்பது மீதிக்கதையாக உள்ளது. இந்த வெப் சீரிஸிக்கு மலையாள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த வெப் சீரிஸைப் பார்த்த தமிழ் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். முழுக்க முழுக்க நகைச்சுவையாக இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த வெப் சீரிஸ் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X