நாகேஷ் வாரிசு உணர்ச்சிகள் பொங்க பேச ஆரம்பித்து உள்ளார்

சென்னை: தமிழ் திரையுலகில் நகைச்சுவை ஜாம்பவான்களில் ஒருவரான நாகேஷ் அவர்களின் மகன் தான் ஆனந்த் பாபு . இவர் தன் தந்தையை போல நகைச்சுவை நடிகராக இல்லாமல் ஹீரோவாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.

1980களில் ஹீரோக்களில் நடனத்தில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கியவர் ஆனந்த் பாபு . தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என வேறு மொழிகளிலும் நடித்திருக்கிறார். அவர் நடித்த பல படங்களில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.

Nagesh son anandbabu continues his fathers duty

புது வசந்தம் சேரன்பாண்டியன், சிகரம் , வானமே எல்லை போன்ற பல வெற்றிப்படங்களில் நடுத்திருக்கிறார் நடிகர் ஆனந்த் பாபு.

பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் தன்னால் நீண்டகாலம் முன்னணி நடிகனாக நிலைத்து நிற்க முடியவில்லை. சினிமாவை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்த நடிகர் ஆனந்த் பாபு அவர்கள். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரையில் தன் பயணத்தை தொடங்கினார்.

Nagesh son anandbabu continues his fathers duty

முன்னணி தொலைக்காட்சிகளில் பல தொடர்களில் நடித்திருந்தார் நடிகர் ஆனந்த் பாபு. ஆனால் அவையாவும் மக்கள் மனதில் பெரிதாக இடம் பிடிக்கவில்லை. இப்பொழுது விஜய் டிவியில் அவர் நடிக்கும் மௌனராகம் தொடரில் காதம்பரியின் தந்தையாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

Nagesh son anandbabu continues his fathers duty
ஒரு தந்தையாக தன்னுடைய நடிப்பை மிக அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் ஆனந்த் பாபு. தன் மகளுடைய சந்தோஷத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு தந்தையாக மிக கச்சிதமாக நடித்திருக்கிறார்.

ஒரு தந்தையாக தன் மகள் செய்த குற்றத்தை தானே செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்கிறார் . ஒரு தந்தையாக தன்னுடைய உணர்வுபூர்வமான நடிப்பை மிக அழகாக நடித்திருந்தார் நடிகர் ஆனந்த் பாபு அவர்கள். சின்னத்திரையில் வேறு எந்த கதாபாத்திரங்களில் நடிப்பார் என்று பொருத்திருந்து பார்ப்போம்.
அப்பாவின் ஆசை மகன் எப்பிடியாவது சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பது . அந்த ஆசைகளை எல்லாம் சின்னத்திரையில் நிறைவேற்றி அப்பாவின் பெருமையை காப்பாற்ற பாடுபடுகிறார் ஆனந்த் பாபு. வெற்றி பெற வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X