»   »  சன் டிவி நாகினியை தெரியுமா?: அப்போ இவர் யார்னு சொல்லுங்க பார்ப்போம்!

சன் டிவி நாகினியை தெரியுமா?: அப்போ இவர் யார்னு சொல்லுங்க பார்ப்போம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாகினி தொடரின் நாயகி மவுனி ராய் போன்றே ஒரு நடிகை இருப்பது தெரிய வந்துள்ளது.

சன் டிவியில் தினமும் இரவு ஒளிபரப்பாகும் நாகினி தொடரில் பாம்பாக வரும் நடிகை மவுனி ராய். இந்நிலையில் பார்க்க அச்சு அசலாக அவரைப் போன்றே மற்றொரு நடிகை இருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த நடிகையின் பெயர் கிருஷ்ணா முகர்ஜி.

கிருஷ்ணா முகர்ஜி

கிருஷ்ணா முகர்ஜி

மவுனி ராயை போன்றே கிருஷ்ணா முகர்ஜியும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். ஏ ஹை முஹப்பதைன் என்ற இந்த தொலைக்காட்சி தொடரில் ஆலியா என்ற கதாபத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர் கிருஷ்ணா.

என்ன ஒற்றுமை

என்ன ஒற்றுமை

பார்க்க கிருஷ்ணாவும், மவுனியும் ஒரே மாதிரி உள்ளனர். இருவரும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். மவுனி போன்று தான் இருப்பதாக மக்கள் கூறுவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார் கிருஷ்ணா.

நாகினி

நாகினி

இந்தி டப்பிங் தொடராக இருந்தாலும் தமிழக ரசிகர்கள் நாகினியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளனர். அதிலும் மவுனி ராய்க்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா

பிரியங்கா

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் வரை பிரபலமாக உள்ளார். இந்நிலையில் நவ்ப்ரீத் பங்கா என்ற பெண் பிரியங்கா சோப்ரா போன்றே இருப்பது தெரிய வந்துள்ளது.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷுமியர் எஸ் பாரிஷா என்ற தொலைக்காட்சி தொடர் நடிகர் அச்சு அசலாக பாலிவுட் பாதுஷா ஷாருக்கான் போன்று உள்ளார்.

English summary
After Shah Rukh Khan and Priyanka Chopra, Nagini actress Mouni Roy has found her look alike.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil