»   »  நக்மாவுக்கு கொலை மிரட்டல்!

நக்மாவுக்கு கொலை மிரட்டல்!

Subscribe to Oneindia Tamil

நடிகை நக்மாவுக்கு செல்போன் மூலம் யாரோ ஒருவர் எஸ்.எம்.எஸ். அனுப்பி மிரட்டி வருவதாக போலீஸில் புகார் கூறப்பட்டுள்ளது.

ஜோதிகாவின் அக்காவான நக்மா, திரையுலகில் இப்போது லைம்லைட்டில் இல்லை. சில போஜ்பூரி படங்களில் அவ்வப்போது தலையைக் காட்டிக்கொண்டிருக்கிறார்.

தமிழ், இந்தி ஆகியவை கைவிட்டு விட்டதால், முன்பு போல திரைப்படங்களில் நக்மாவைக் காண முடிவதில்லை. இந்த நிலையில் மும்பை பந்த்ராகாவல் நிலையத்தில் நக்மா ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், எனது செல்போனுக்கு கடந்த சில நாட்களாக யாரோ ஒருவர் எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகிறார். தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்.ஒரு எஸ்.எம்.எஸில் முகத்தில் ஆசிட் முட்டையை வீசி கொலை செய்வோம் என்ற வாசகம் இருந்தது.

சில சமயம் போனில் பேசியும் மிரட்டுகிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், நக்மா செல்போனுக்கு மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நக்மாவுக்கும், தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வெளியாகிபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். எனவே யாராவது நிழலுக தாதா கும்பல் நக்மாவுக்கு மிரட்டல் விடுத்திருக்கலாமோ எனபோலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் இது தாதா கும்பலிடமிருந்து வந்த மிரட்டலாகத் தெரியவில்லை. யாரோ புத்தி சரியில்லாத நபர் அல்லது குறும்புக்கார ரசிகர்தான் இந்தமிரட்டலை விடுத்திருக்க வேண்டும் என்று நக்மா கூறியுள்ளார்.

நக்மாவுக்கு மிரட்டல் வருவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே சில முறை அவருக்கு மிரட்டல் வந்துள்ளது. இதே பந்த்ரா காவல் நிலையத்தில்கடந்த ஆண்டும் இதுபோல ஒரு புகாரைக் கொடுத்தார் நக்மா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil