twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நக்மா vs கங்கனா.. பாலிவுட்டிலும் தொடங்கிய லேடீஸ் ஃபைட்.. சிக்கித் தவிக்கும் பல பிரபலங்கள்?

    |

    மும்பை: நக்மா vs கங்கனா ரனாவத் என பாலிவுட்டிலும் லேடீஸ் ஃபைட் களைகட்டி வருகிறது.

    மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என கங்கனா ரனாவத் கங்கணம் கட்டி இறங்கி உள்ளார்.

    பாலிவுட்டில் நெப்போடிசத்தால் தன்னை போன்ற பல அவுட்சைடர்ஸ் நடிகர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கங்கனா குற்றம்சாட்டி வருகிறார்.

    தனது ஆவேச நடனத்தை ட்ரோல் செய்த ரசிகர்.. அதிரடியாக அப்படி பதிலடி கொடுத்த பிரபல அம்மா நடிகை!தனது ஆவேச நடனத்தை ட்ரோல் செய்த ரசிகர்.. அதிரடியாக அப்படி பதிலடி கொடுத்த பிரபல அம்மா நடிகை!

    விடாத கங்கனா

    விடாத கங்கனா

    கடந்த ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு இறந்தார் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவரது இறப்பு பாலிவுட்டில், நெப்போடிசம் பிரச்சனையை வெகுவாக கிளப்பி இருக்கிறது. சுஷாந்த் சிங் மரணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் சிலர் தான் காரணம் என கங்கனா ரனாவத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

    சிபிஐ விசாரணை

    சிபிஐ விசாரணை

    மும்பை போலீசார் ஏன் இந்த விவகாரத்தில் தன்னிடம் விசாரணை நடத்த மறுக்கின்றனர் என்றும், சுஷாந்த் சிங் தற்கொலை செய்யவில்லை. அது ஒரு திட்டமிட்ட கொலை என்றும், சுஷாந்த் சிங் மர்ம மரணத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    ஆதாயம் தேடுகிறார்

    ஆதாயம் தேடுகிறார்

    இறந்தவரை வைத்து ஆதாயம் தேடுவது இழிவான செயல் என நடிகை கங்கனாவை சமீபத்தில் நடிகை டாப்சி கடுமையாக விமர்சித்து இருந்தார். கங்கனா ரசிகர்களுக்கும், டாப்சி ரசிகர்களுக்கும் சமூக வலைதளத்தில் இதனால், மிகப்பெரிய சண்டையே மூண்டது. இந்நிலையில், கங்கனாவுடன் கோதாவில் இறங்கி உள்ளார் நடிகை நக்மா.

    அதுக்கு உனக்கு ரைட்ஸ் கிடையாது

    அதுக்கு உனக்கு ரைட்ஸ் கிடையாது

    இந்நிலையில், தற்போது நடிகை நக்மா, கங்கனா ரனாவத் குறித்து போட்டிருக்கும் ஒரு ட்விட்டர் பதிவு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. நெப்போடிசத்தால் உருவானது தான் கங்கனாவின் மொத்த திரை வாழ்க்கையும் என்ற அந்த மீமில், ஆதித்யா பஞ்சோலி மூலமாக கங்கனா சினிமாவுக்கு வந்தார் என்றும், மகேஷ் பட் தயாரிப்பில் முதல் படம் வெளியானது, முதல் படம் இம்ரான் ஹாஷ்மியுடன், ஹிரித்திக் ரோஷன் தயவால் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். தனது தங்கை ரங்கோலியை மேனேஜர் ஆக்கினார் என கிழித்து தொங்கவிட்டு இருக்கிறார்.

    மறுப்பு தெரிவிக்கும் கங்கனா தரப்பு

    மறுப்பு தெரிவிக்கும் கங்கனா தரப்பு

    பஞ்சோலி கங்கனா ரனாவத்தின் காதலர் கிடையாது என பல முறை கங்கனா விளக்கி உள்ளார். ஆரம்பத்தில் ஆலோசகராக இருந்த அவர், திடீரென தவறான ஆலோசனைகளை வழங்கும் நபராக மாறி விட்டார். மேலும், ஒவ்வொரு முறையும் ஆடிஷனுக்கு போகும் போதும் கங்கனாவை அவர் தாக்கி உள்ளார். அவர் மூலமாக சினிமாவுக்கு கங்கனா வரவில்லை என கங்கனா தரப்பு மறுப்பு தெரிவித்து இருக்கிறது.

    ஆடிஷன் நடந்துச்சு

    ஆடிஷன் நடந்துச்சு

    சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு காரணம் என சொல்லப்படும் ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட்டின் தயாரிப்பில் வெளியான கேங்ஸ்டர் படத்தில் ஆடிஷன் நடத்தப்பட்டு, அதில் தேர்வான பின்னர் தான் கங்கனா அந்த படத்தில் நடித்தார். ரித்திக் ரோஷனின் கைட் படத்தில் டம்மி ரோல் கொடுக்கப்பட்டு, கங்கனாவின் வாழ்க்கையே சீரழிந்தது. என நக்மாவின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் கங்கனா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

    தங்கையை ஏன் மேனேஜர் ஆனார்

    தங்கையை ஏன் மேனேஜர் ஆனார்

    கங்கனா ரனாவத்துக்கு மேனேஜர் ஆக இருக்க எந்தவொரு பெரிய நிறுவனமும் முன் வரவில்லை. ஏனென்றால் அவர் எந்தவொரு பணக்காரர் வீட்டு திருமணங்களிலும் பணத்துக்காக நடனமாட மாட்டார். அதே போல ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரங்களிலும் நடிக்க மாட்டார். இதனால், ஆங்கிலம் கூட சரிவர தெரியாத தனது தங்கையை மேனேஜர் ஆக்கிக் கொண்டு, தனது பணியை ஆற்றி வருகிறார். இதில் நெப்போடிசம் எல்லாம் கிடையாதுங்கோ என இதற்கும் சமாளிப்பாக பதில் அளித்துள்ளார்.

    நீங்க முதல்ல ஒழுங்கா

    நீங்க முதல்ல ஒழுங்கா

    கங்கனா ரனாவத்தின் ரசிகர் படையினர், நக்மாவை திருப்பித் தாக்க ஆரம்பித்து வருகின்றனர். #Nagma என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து, நீங்க முதல்ல ஒழுங்கா, மாஃபியா டான் தாவுத்திடம் உங்களுக்கு தொடர்பு இருந்தது, திருமணமான மூன்று நடிகர்களுடன் டேட்டிங் செய்தீர்கள், பிரபல கிரிக்கெட்டர் ஒருவருடன் காதல், ஆனால் எப்பவும் சிங்கிள் என நக்மாவை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.

    English summary
    Veteran actor Nagma, who is also an ex-Congress politician, took to Twitter to decry Kangana's ongoing battle against nepotism in the film industry following the death of actor Sushant Singh Rajput earlier last month.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X