அவங்களுக்கு அனுப்பறீங்களே.. கங்கனா ரனாவத்துக்கு மட்டும் ஏன் சம்மன் அனுப்பலை? நடிகை நக்மா கேள்வி!

By

சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகை கங்கனாவுக்கு ஏன் சம்மன் அனுப்பவில்லை என்று நக்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து கடந்த சில மாதங்களாக பரபரப்பாகி இருக்கிறது பாலிவுட்.

அவர் மரண வழக்கை போலீசார் விசாரித்து வந்த நிலையில் விவகாரம் போதைப் பொருள் விவகாரத்துக்கு திரும்பி இருக்கிறது.

ரியா சக்கரவர்த்தி

ரியா சக்கரவர்த்தி

சுஷாந்த் சிங்கின் தந்தை, தனது மகன் சாவுக்கு ரியா சக்கரவர்த்தி காரணம் என்று கூறி, பீகார் போலீசில் புகார் அளித்தார். சுஷாந்த் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி மாற்றப்பட்டு இருப்பதாகவும் புகாரில் அவர் கூறி இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

கும்பலுடன் தொடர்பு

கும்பலுடன் தொடர்பு

சுஷாந்த் சிங்கின் தற்கொலை குறித்து சி.பி.ஐ. போலீசாரும், பணமோசடி புகார் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தினர். சுஷாந்த் சிங் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியின் வாட்ஸ் அப் உரையாடலை கண்ட போலீசாருக்கு, அவருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

போதைப் பொருள்

போதைப் பொருள்

இதையடுத்து சுஷாந்த் தற்கொலையை போதைப்பொருள் வழக்குடன் தொடர்புபடுத்தி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்க தொடங்கினர். விசாரணையில் ரியா போதைப் பொருள் பயன்படுத்தியதும், சுஷாந்த் சிங்குக்காக அவர் போதைப் பொருள் வாங்கியதும் தெரியவந்தது.

ரகுல் பிரீத்சிங்

ரகுல் பிரீத்சிங்

இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவர் சகோதரர் சோவிக், சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் தீபக் சவாந்த் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

கங்கனா ரனவத்

கங்கனா ரனவத்

இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர். இந்நிலையில் நடிகை நக்மா, தான் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறிய நடிகை கங்கனா ரனவத்துக்கு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் (என்சிபி), ஏன் சம்மன் அனுப்பவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சம்மன் அனுப்பலை

சம்மன் அனுப்பலை

இதுபற்றி ட்விட்டரில் அவர், போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்ட கங்கனாவுக்கு ஏன் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பவில்லை? நடிகைகளின் வாட்ஸ்-அப் சாட் அடிப்படையில் மட்டும்தான் சம்மன் அனுப்புவார்களா? அந்த தகவலை மீடியாவுக்கு கொடுத்து நடிகைகளின் பெயரை கெடுப்பதுதான் என்சிபியின் வேலையா? என்று கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X