»   »  ஆதாரம் இருக்கா? சரத்துக்கு நக்மா கேள்வி!

ஆதாரம் இருக்கா? சரத்துக்கு நக்மா கேள்வி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் ரூ. 95 லட்சம் பணத்தை வாங்கினேன் என்று கூறும் சரத்குமார் அதுகுறித்த ஏதாவது ஆதாரத்தைக் காட்டமுடியுமா என்று நடிகை நக்மா கேட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சுபோத்குமார் என்ற இரும்பு வியாபாரி சரத்குமார் தன்னிடம் ரூ. 95 லட்ச பண மோசடிசெய்து விட்டதாக கூறி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து சரத்குமாரிடம் சுபோத்குமார்கேட்டபோது,

நக்மாவுக்காகத்தான் அதை வாங்கினேன். அதை அவரிடம் தந்துவிட்டேன். முடிந்தால் அவரிடம் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சரத் கூறியதாக சுபோத்குமார் கூறியுள்ளார்.

இந் நிலையில் சரத்குமாரின் கருத்தை நக்மா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

நான் அரசியலில் இருக்கிறேன், சினிமாவிலும் இருக்கிறேன். இதனால் யார் வேண்டுமானாலும் எனது பெயரைதவறாகப் பயன்படுத்தலாம். என்னைப் பிரச்சினையில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள்.

எனக்கும் சரத்குமாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சுபோத்குமாரிடம் சரத் கடன் வாங்கியிருக்கலாம்.அதுகுறித்து எனக்கு எப்படித் தெரியும்? வேண்டும் என்றே இதில் என்னை சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். நானபணம் வாங்கினேன் என்றால் ஏதாவது ஆதாரத்தையோ அல்லது ஆவணத்தையோ காட்ட முடியுமா?

அமிர் கான், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கெல்லாம் இதுபோல பிரச்சினைகள் வந்தன.அதுபோலத்தான் எனக்கும் வந்துள்ளது. ஆனால் உண்மையை ரொம்ப நாள் மறைத்து வைக்க முடியாது.என்றாவது ஒரு நாள் அது வெளியே வந்துதான் ஆகும் என்றார் நக்மா.

சூர்யா-ஜோதிகா கல்யாணம்:

சூர்யாவுக்கு கல்யாணம் என்று அவரது தந்தை சிவக்குமார் அறிவித்துள்ளார். ஆனால், பெண் யார் என்றுசொல்லவில்லை. ஜோதிகாவை சூர்யா திருமணம் செய்வாரா இல்லையா என்று நக்மாவிடம் கேட்டபோது,

சூர்யாவைத்தான் ஜோதிகா திருமணம் செய்யவுள்ளார். அக்டோபரில் திருமணம் நடக்கிறது. இதற்காக நான்சென்னைக்கு வருகிறேன். சூர்யா நல்ல மனிதர். மிக நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த ஜோடிபொருத்தமானது,

இருவரும் சிறப்பாக இருப்பார்கள். நீண்ட காலமாக காதலித்து வந்தனர். இப்போது கை பிடிக்கவுள்ளனர் என்றார்நக்மா பொறுப்பான அக்காவாக.

-சரத் மோசடி செய்ததாக தெரியவில்லை: கமிஷனர்

இந் நிலையில் இரும்பு வியாபாரி சுபோத்குமாரிடம் நடிகர் சரத்குமார் பண மோசடி செய்ததாக கூற முடியாது,அப்படி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண்கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், சரத்குமார் மீது கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்தோம். 1996ம் ஆண்டு பணம்வாங்கப்பட்டுள்ளது. இதற்காக 2 பிராமிசரி நோட்டுக்கள் எழுதி பெறப்பட்டுள்ளது. இது சிவில் பணபரிவர்த்தனை ஆகும். இதுவரை நடந்த விசாரணையை வைத்துப் பார்க்கும்போது சரத்குமார் மோசடிசெய்திருப்பதாக கூற முடியாது.

பணத்தைத் திருப்பித் தந்திருப்பதாக சரத்குமார் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்என்றார்.

காதல் ஜோடிகள்:

தொடர்ந்து அவர் கூறுகையில், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு நிறைய காதல்ஜோடிகள் அடைக்கலம் புகுகிறார்கள்.

இதை வைத்து போலீஸார் காதலர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூற முடியாது. திருமணத்தை முடித்துக்கொண்ட பின்னரே, பாதுகாப்பு கோரியே அவர்கள் இங்கு வருகிறார்கள். சட்டப்பூர்வமாக, திருமண வயதைஎட்டிய பின்னர் நடந்த திருமணமாக இருந்தால்தான் நாங்கள் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கநடவடிக்கை எடுக்கிறோம்.

திருமண வயதை எட்டிய பின்னர், முறையாகவும், சட்டப்பூர்வமாகவும் திருமணம் செய்வதை குற்றம் என்றுசொல்ல முடியாது. அதை நாங்களும் தடுக்க முடியாது. திருமணம் என்பது நல்ல, குடும்ப விசேஷம். இதைபெற்றோர்களும், சம்பந்தப்பட்ட காதலர்களும் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது என்றார் லத்திகா சரண்.

இரும்பு வியாபாரியிடம் சரத்குமார் ரூ. 95 லட்சம்மோசடி: நக்மாவிடம் கேட்க சொல்லி அட்வைஸ்

Read more about: nagma questions sarathkumar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil