அபிஷேக் மீது செம காண்டில் இருக்கும் நாடியா சாங்… என்ன வீடியோ போட்டு இருக்காங்கனு பாருங்க !
சென்னை : நாடியா சாங் அபிஷேக்கை ட்ரோல் செய்து வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நாடியா சாங் வெளியேறியதற்கு அபிஷேக் தான் காரணம், அவர் நாடியா சாங்கின் பெயரை நாமினேட் செய்திருந்தார்.
இதனால் அபிஷேக் மீது நாடியா சாங் செம காண்டில் இருக்கிறார்.

நாடியா சாங்
பிக்பாஸ் சீசனிலும் வெளிநாடு வாழ் தமிழர்களை ஈர்க்கும் விதமாக வெளிநாடு வாழ் தமிழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்த சீசனில் நாடியா சாங் என்ற மலேசியா வாழ் தமிழர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கடந்து வந்த பாதை
பிக்பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்களில் நாடியா சாங்கும் ஒருவராக கலந்து கொண்டார். இவர் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கில், தனது தாயின் கண்டிப்பு குறித்தும், தனது கணவரால் தான் இந்த நிலைக்கு வந்ததாகவும் கூறினார். இதனால் நாடியாவின் கணவர் சாங் சூன் ஹுவாத் மீது அனைவருக்கும் ஒரு மரியாதையே ஏற்பட்டது.

வெளியேறினார்
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டின் முதல் ஆளாக நாடிய சாங் வெளியேற்றப்பட்டார். நாடியா சாங்க வெளியேறியதற்கு முக்கிய காரணம் அபிஷேக் தான் , ஏன் என்றால் அவர் நாடியாவை நாமினேட் செய்தார். இதனால் அபிஷேக் மீது பயங்கர கோபத்தில் உள்ள நாடியா, அபிஷேக்கை கேலி செய்யும் வீடியோவை தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பார்த்ததே இல்லை
நேற்றைய எபிசோடில் கமல் அபிஷேக்கிடம், எனக்கு ஒரு சந்தேகம், நிஜமாவே இங்கு வரும் முன்பு பிக் பாஸ் பார்த்தது இல்லையா என கேட்டார், சத்தியமா பார்த்தது இல்லை சார். நீங்க வீக் எண்டு வருவது மட்டும் லைட்டாக பார்த்திருக்கேன் சார் என அபிஷேக் சொல்கிறார். அப்போ பார்த்து இருக்கீங்க என்று பங்கமாக பொய் சொல்லி மாட்டிக்கொண்டோர். பஞ்சதந்திர டாஸ்கில் மற்ற போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட முறையை கண்டித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











