சித்ராவின் முகத்தில் இருந்த நகக்கீறல்கள் யாருடையது? பிரேத பரிசோதனையில் வெளியான பரபரப்பு தகவல்!
சென்னை: நடிகை சித்ராவின் முகத்தில் இருந்த கீறல்கள் யாருடையது என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
பிரபல விஜேயும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா நேற்று சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது கணவரான ஹேம்நாத் உடன் இருந்தபோதே அவரை வெளியே அனுப்பிவிட்டு ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

எழுந்த சந்தேகம்
இருந்த போதும் அவரது முகத்தில் இருந்த காயங்கள் அவரது மரணம் உண்மையிலேயே தற்கொலைதானா என்ற சந்தேகத்தை எழுப்பியது. இதனை தொடர்ந்து சித்ராவுடன் அறையில் தங்கியிருந்த அவரது கணவரிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை
ஹோட்டல் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் ஹோட்டல் ஊழியர்கள் மற்றும சக நடிகர்களிடம் போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சித்ராவின் உடல் இன்று கூராய்வு செய்யப்பட்டது.

இறுதி அஞ்சலி
பின்னர் அவரது சகோதரர் சரவணனிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சித்ராவின் உடல் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது தந்தையின் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதற்கட்ட அறிக்கை
சித்ராவின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சித்ராவின் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நகக்கீரல்கள் யாருடையது?
அதன் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலைதான் என போலீசார் தெரிவித்துள்ளனர். சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் எனவும், சித்ராவின் கன்னத்தில் இருந்த நகக்கீரல்கள் அவருடையதுதான் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











