அக்.11க்கு முன்னாலேயே ரிலீசாகிறதா ‘நய்யாண்டி’..?
சென்னை: ஏற்கனவே தெரிவித்த தேதிக்கு முன்னதாகவே தனது நய்யாண்டி படத்தை வெளியிடும் ஐடியாவில் இருக்கிறார் போல தனுஷ். இதனை மறைமுகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'களவாணி', 'வாகை சூடவா' ஆகிய படங்களை அடுத்து சற்குணம் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் நய்யாண்டி. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி நஸ்ரியா நசீம்.
இவர்கள் தவிர சரண்யா பொன்வண்ணன், சூரி, சத்யன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் சற்குனத்தின் நண்பரான ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

நய்யாண்டி....
இப்படத்திற்கு முதலில் ‘சொட்ட வாளக்குடி' எனப் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் நய்யாண்டி எனப் பெயர் மாற்றப்பட்டது.

நகைச்சுவை கலந்த காதல்....
குத்துவிளக்கு செய்யும் கடை வைத்திருக்கும் ஹீரோ, பல் மருத்துவம் படிக்கும் ஹீரோயின் இவர்கள் இருவருக்கும் இடையில் உண்டாகும் காதல், இது தான் படத்தின் கதைக்கரு.

ஆடியோ ரிலீஸ்....
அக்டோபர் 11-ம் தேதி நய்யாண்டி படம் வெளி வருவதாக திட்டமிடப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.

விரைவில் ரிலீஸ்....
இந்நிலையில், ரசிகர்களே நீங்கள் எதிர்பார்க்கும் தினத்திற்உ முன்னதாகவே படம் வெளியாகலாம் என சூசகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளிய்யிட்டுள்ளார் தனுஷ்.

டெடி பியர்....
இப்படத்தில் தனுஷ் ‘டெடி பியர்' என்றொரு பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











