அதிகாலை 3 மணிக்கு வரச் சொல்லி டார்ச்சர்.. பிரபல ஹீரோயின் மீது சர்ச்சை பட நடிகை பரபரப்பு புகார்!
ஐதராபாத்: பிரபல ஹீரோயின் தன்னை டார்ச்சர் செய்ததாக, சர்ச்சை பட நாயகி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா, சமீபத்தில் கிளைமாக்ஸ் மற்றும் நேக்கட் என்ற இரண்டு படங்களை இயக்கி இருந்தார்.
இந்த படங்களின் போஸ்டர்களும் டிரைலரும் ஆபாசமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

ராம் கோபால் வர்மா
பின்னர், ராம்கோபால் வர்மாவின் சேனலில் 200 ரூபாய் கட்டணத்தில் இந்தப் படங்கள் வெளியிடப்பட்டன. நேக்ட் படம், வெளியாகி 20 மணி நேரத்தில் 35445 பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்து வருகிறது என ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். வழக்கம் போல இதற்கு ரசிகர்கள் பலர் கண்டபடி தங்கள் கமென்ட்களை பதிவு செய்திருந்தனர்.

பேஷன் டிசைனர் ஶ்ரீ ரபாகா
இந்நிலையில் நேக்ட் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் இவர்தான் என்று ஸ்வீட்டி என்பவரை அறிமுகப்படுத்தினார். அவர் பெயர், ஶ்ரீ ரபாகா. பேஷன் டிசைனரான இவர், தெலுங்கில் பல படங்களுக்கு காஷ்ட்யூம் டிசைனராக பணியாற்றி இருக்கிறார். இவர், யூடியூப் சேனல் ஒன்றுக்கு இப்போது அளித்துள்ள பேட்டி, டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஷி கண்ணா டார்ச்சர்
அதில், தன்னை ஹீரோயின் ராஷி கண்ணா கடுமையாக டார்ச்சர் செய்ததாகத் தெரிவித்துள்ளார். நடிகை ராஷி கண்ணா, தமிழில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா நடித்த 'இமைக்கா நொடிகள்' மூலம் அறிமுகமானார். பிறகு, ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷாலின் அயோக்யா, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

தெலுங்கு படத்தில்
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் மீது ஶ்ரீரபகா கூறியுள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது: சுப்ரீம் என்ற தெலுங்கு படத்தில் காஷ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றினேன். அனில் ரவிபுடி இயக்கிய இந்தப் படத்தில் சாய்தரம் தேஜ் ஹீரோ. ராஷி கண்ணா ஹீரோயினாக நடித்தார். இதன் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென அதிகாலை 3 மணிக்கு என்னை செட்டுக்கு வரச் சொன்னார், ஒருநாள்.

சேலை கட்டி விடுவதற்கு
வேகமாக சென்றேன். அவரது சேலையை கட்டி விடுவதற்காகவே என்னை அழைத்தது தெரிந்தது. அவரைச் சுற்றி பெண்கள் உட்பட 150 பேர் இருந்தார்கள். அதில் யாராவது ஒருவர் அதை செய்திருக்க முடியும். ஆனால், அதற்காக அவர் என்னை மணிகணக்காகக் காத்திருக்க வைத்தார். அவர் என் சுயமரியாதையைப் புண்படுத்தினார். அவர் ஹீரோயினாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த தவறான அணுமுறை இருக்கிறது.

ராஜூ சுந்தரம்
இது இயக்குனர் அனில் ரவிபுடிக்கும் தெரியும். நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் மாஸ்டரும் இந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். அவரிடமும் அப்போது நான் விஷயத்தைச் சொன்னேன். இதற்காகவா இந்த நேரத்தில் வந்தீர்கள் என்று கேட்டார். இவ்வாறு கூறியுள்ளார். ஶ்ரீரபகாவின் இந்த புகார் டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











