அப்பாவும் பெண்ணும் ஒரே கலர் டிரஸ்... மகளுடன் க்யூட் அடாவடி செய்யும் நகுல்!

சென்னை : நடிகர் நகுல் தனது மகளுடன் இருக்கும் க்யூட் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நகுல்,ஸ்ருதி தம்பதிக்கு சென்ற ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கு அகிரா என பெயர் வைத்துள்ள நகுல் அவர் செய்யும் சேட்டைகளை வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

தற்போது அவர் பகிர்ந்துள்ள வேடிக்கையான போட்டோ அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

அறிமுகம்

அறிமுகம்

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் நகுல். அந்த படத்தில் ஐந்து நண்பர்களில் ஒருவராக அவர் நடித்து இருப்பார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஹீரோவாக அறிமுகம்

ஹீரோவாக அறிமுகம்

பாய்ஸ் படத்திற்கு பிறகு, ஹீரோவாக காதலில் விழுந்தேன் படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். அந்த திரைப்படம் நகுலுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து மாசிலாமணி, நான் ராஜாவாகப்போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

நடுவராக

நடுவராக

வரிசையாக பல படங்களில் நடித்து வந்த நகுல், ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போனதால், கலர்ஸ் தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியை தொகுந்து வழங்கினார். மேலும், விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார்.

ஆக்டிவாக

ஆக்டிவாக

நகுலுக்கு சென்ற ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. மனைவி ஸ்ருதி மற்றும் தனது மகள் அகிராவுடன் இருக்கும் புகைப்படங்களையும் தனது மகள் செய்யும் சேட்டைகளை வீடியோவாக அவ்வப்போது பதிவிடுகிறார். இதை ரசிகர்கள் விரும்பி ரசித்து வருகின்றனர்.

வேடிக்கையான புகைப்படம்

வேடிக்கையான புகைப்படம்

நகுல் நீல குர்தி டாப் அணிந்து கொண்டு தனது மகள் அகிராவுக்கு அதே போன்ற குர்தியை அணிவித்து இரட்டையர்கள் போல போஸ் கொடுத்துள்ளார். நகுலனின் இந்த வேடிக்கையான புகைப்படம் நகுல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படம் ரசிகர்களின் கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X