அடுத்த ஹிட் சாங் ரெடி...7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பின்னணி பாடும் நகுல்

சென்னை : பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான நகுல், நடிப்பு, நடனம் ஆகியவற்றில் திறமை வாய்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் திறமையான பின்னணி பாடர் என்பது மிகச் சிலருக்கு மட்டும் தெரியும்.

இவர் பல படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை பாடி உள்ளார். அந்நியன் படத்தில் காதல் யானை, கஜினி படத்தில் எக்ஸ் மச்சி, காதலில் விழுந்தேன் படத்தில் நாக்கு முக்கா உள்ளிட்ட பாடல்களை நகுல் தான் பாடி உள்ளார். பாய்ஸ் படத்திற்கு பிறகு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

வாய்ப்புக்காக காத்திருப்பு

வாய்ப்புக்காக காத்திருப்பு

இவர் கடைசியாக 2014 ல் பார்த்திபன் நடிப்பில் வெளியான கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில், தமான் இசையில், நிரஞ்சன் பாரதி எழுதி பாடல் ஒன்றை பாடினார். அதன் பிறகு வாய்ப்புக்கள் ஏதும் கிடைக்காமல் இருந்தார்.

7 ஆண்டுகளுக்கு பின் பாடல்

7 ஆண்டுகளுக்கு பின் பாடல்

இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில், சதுசன் மங்களராஜா இயக்கும் புதிய படம் ஒன்றிற்காக பாடல் ஒன்றை பாடி உள்ளார். இப்படத்திற்கு அஷ்வத் இசை அமைக்கிறார். கிரைம் த்ரில்லர் படமான இதில் பிரதாப் போத்தன், மணிகண்டன் ஆசாரி ஆகியோர் நடிக்க உள்ளனர். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

மனநிறைவாக உணர்கிறேன்

மனநிறைவாக உணர்கிறேன்

பாடல் ரெக்கார்டிங் முடிந்த பிறகு பேசிய நகுல், மீண்டும் பின்னணி பாட வந்துள்ளது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. அஷ்வத் இசையில் பாடியது நிறைவான அனுபவத்தை கொடுக்கிறது. இது துள்ளல் இசை பாடல் தான். இருந்தாலும் மெலோடியும் கலந்துள்ளது என்றார்.

நகுல் தான் பாடனும்

நகுல் தான் பாடனும்

இசையமைப்பாளர் அஷ்ரத் கூறுகையில், இந்த பாடலை நகுல் பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதற்காக நகுலுக்கு மெசேஜ் செய்தேன். அவரது உடனடியாக ஒப்புக் கொண்டார். அனைவருக்கும் தனது குரலில் திருப்தி என்றால் மட்டும் முழு பாடலை பாடுவதாக அவர் கூறினார். பாடல் நன்றாக வந்துள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X